தமிழோடு விளையாடுவோம் – 5

Posted on ஜனவரி 1, 2012

12


அனைவருக்கும் என் இனிய ஆங்கிலப்புத்தாண்டு (2012) வாழ்த்துகள்!

—————————————————————————————————————————-
கேள்வி: ஆங்கிலப்புத்தாண்டு அன்று “தமிழோடு விளையாடுவோம்” பதிவா?

பதில்: நேரம் கிடைக்கும் பொழுது தான் பதிவு எழுத முடிகிறது. அதுபோக தமிழ்ப் புத்தாண்டு என்றைக்கு என்று எனக்கு தெளிவாகத் தெரியவில்லை. 😉
—————————————————————————————————————————-

துணுக்கு:
தமிழுக்குத் தொண்டு செய்ய எழுத்தாளர்கள், பேச்சாளர்கள், பேராசிரியர்கள், கவிஞர்கள், கலைஞர்கள், வலைப்பதிவர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள். எனவே, நான் தமிழுக்கு பொறியாளனாக(வும்) தொண்டு செய்ய விரும்புகிறேன். அதற்காக, இந்த ஆண்டு தமிழ் குறித்த ஒரு பொறியியல் ஆய்வு செய்யப்போகிறேன். வெற்றி பெற்றால் பதிவில் பகிர்வேன். நன்றி.

விளையாட்டுக்குள் போவோமா?!

மெல்லினம்:

குறைந்தது 5 எழுத்துக்களைக் கொண்ட தூய தமிழ்ச்சொல் 5 தரவேண்டும்.

விதிகள்:

* அந்தச் சொற்களில் ஒரு வல்லின எழுத்து(க்,ச்,ட்,த்,ப்,ற் + அதன் உயிர்மெய் கலப்புகள்/மாற்றங்கள்) கூட வரக்கூடாது.
(எ.கா) – புத்தாண்டு -> தவறு (வல்லின எழுத்துகள் வருகின்றன.)

* உயிரெழுத்துக்களும் வரக்கூடாது. மெல்லினமும், இடையினமும் வரலாம்.
(எ.கா) – இடையினம் -> தவறு (உயிரெழுத்து ‘இ’ வருகின்றது, வல்லின எழுத்து ‘டை’ வருகிறது.)

சரியான சொல்லுக்கு எடுத்துக்காட்டு: வல்லினம் 🙂

உணர்வொலிக்கிளவி:

கீழே கொடுக்கப்பட்டுள்ள உணர்வொலிக்கிளவிகளையும்(ideophones) அதற்கேற்ற செயலையும் சரியாக பொருத்துக.

(அ) படபடவென்று || (க) விழித்தான்
(ஆ) கடகடவென்று || (ங) பேசினான்
(இ) தகதகவென்று || (ச) ஏறினான்
(ஈ) மளமளவென்று || (ஞ) ஓடினான்
(உ) திருதிருவென்று || (ட) பார்த்தான்
(ஊ) குறுகுறுவென்று || (ண) மின்னினாள்

உணர்வொலிக்கிளவி பற்றிய விக்கிப்பீடியா கட்டுரை மற்றும் அது தொடர்பான பேச்சு

குறுந்தகவல்:

முந்தைய விளையாட்டுகள்:

தமிழோடு விளையாடுவோம் – 1

தமிழோடு விளையாடுவோம் – 2

தமிழோடு விளையாடுவோம் – 3

தமிழோடு விளையாடுவோம் – 4