நான் யார்?

எனது சொந்த ஊர் பாரதி பிறந்த எட்டயபுரம். நான் பிறந்தது தூத்துக்குடியில். வளர்ந்தது மதுரையில் இருக்கும் சோழவந்தானில். பள்ளிப்பருவம் சோழவந்தானில். கல்லூரி காலம் மதுரையில். தற்போதைக்கு அலுவலக அலுவல்கள் பெங்களூரில். இந்த வலைப்பதிவு மூலம் சமுதாயத்திற்கு/குடியினருக்கு என்னால் முடிந்த கருத்துக்களைக் கூற விரும்புகிறேன். எனக்கு பின்னூட்டங்கள்/கருத்துகள் தரும் நண்பர்களுக்கு, நன்றி!

ஆளுமைக் குறிப்பு (Bio-data)

பெயர் : பலராமன்
தொழில் : பொறியாளர்
பொழுதுபோக்கு : இசை, டுவிட்டர், வலைப்பதிதல்
திறமைகள் : கொஞ்சம் கொஞ்சம் மாற்றுக்குரலில் பேசுவது (Mimicry), குறும்படங்கள் எடுப்பது/நடிப்பது
பிடித்தத் திரைப்படங்கள் : முகவரி, பஞ்ச தந்திரம், தில்லு முல்லு, கஜினி மற்றும் பல…
பிடித்த நூல்கள் : நான் படித்த நூல்கள் மிகவும் குறைவு. படித்த ஒவ்வொரு நூலும் என்னைக் கவர்ந்ததால் தான் படித்தேன்.

பிடித்த எழுத்தாளர்கள், பேச்சாளர்கள், வலைப்பதிவர்கள் என்று தனியாக யாரும் கிடையாது. அனைவரின் படைப்பையும் விரும்பிப் படிப்பேன்.

தமிழ் மொழிக்கான எமது facebook பக்கம்

தமிழ் மொழிக்கான எமது twitter ஓடை

இந்தப் பதிவுக்குள் தெரிந்தோ தெரியாமலோ எட்டிப்பார்க்கும் வாசகர்கள் பெரும்பாலும் என்னிடம் கேட்கும் கேள்வி “எறுழ்வலி என்றால் என்ன பொருள்?”

எறுழ்வலி என்றால் “மிகுந்த வலிமையுடையவன்” என்று பொருள்படும். மேலும் விளக்கத்திற்கு இங்கே சென்று பார்க்கவும்!

நிறைய பேரால் மிகவும் வரவேற்கப்பட்ட என்னுடைய துண்டுச்செய்தி!

விளம்பரம்:
 
 இந்த எறுழ்வலி பதிவில் வெளியான சில சிறுகதைகளையும் கவிதைகளையும் தொகுத்து Free Tamil Ebooks உதவியின் மூலம் மின்நூலாக வெளியிட்டு விட்டேன். அந்த மின்நூல் இங்கே கிடைக்கும்!

எறுழ்வலி இலவச மின்நூல்

 இந்த மின்நூலுக்கு அட்டைப்படம் செய்து கொடுத்த ராஜேஷூக்கு மிக்க நன்றி. அதே போல் நான் மின்நூலாக்கம் செய்வதற்கு தூண்டுதலாகவும் இருந்து உதவியும் செய்த சீனிவாசன் மற்றும் இரவி இருவருக்கும் மிக்க நன்றி.

ஆண்டிராயிடு கருவிகளில் இந்த மின்னூலை இங்கிருந்து இலவசமாக தரவிறக்கிக்கொள்ளலாம்!

45 Responses “நான் யார்?” →
  1. balaraman naan itha solliyae aganum enga itha vida ivlo azhaga yaarum tamilai paarthu iruka mattanga..

    Like

    மறுமொழி
  2. un tamil aarvatha partha enaku pooripu than varuthu… unmailaye santoshama iruku… oru chinna thapa thavira… elame tamil title a vacha nee title bar la search ku “go” nu vachitiye da… f u can change tat too…

    Like

    மறுமொழி
  3. hey wat da.i could not even believe….see i hav forgot to write in tamil itself…..cha,its a really a wonderfull job da……juz continue, we guys love it

    Like

    மறுமொழி
  4. machi, nee oru village vingyaani..

    Like

    மறுமொழி
  5. muyarchikku vazhthukkal friend!

    Like

    மறுமொழி
  6. Congrats on a wonderful blog! Nice meeting you too!

    Like

    மறுமொழி

  7. துளசி

    மார்ச் 19, 2010

    உங்கள் வலை பூவிற்குள் தற்செயலாய் நுழைந்தேன். உங்கள் மொழி ஆளுகையும், திறமையும் அருமை.
    தமிழ் பணி தொடரட்டும். எம் தாய் மொழி வளரட்டும்.

    Like

    மறுமொழி

  8. தமிழறிவன்

    மார்ச் 24, 2010

    நண்பரே உங்கள் தமிழ் பணி கண்டு வியந்தோம் உங்கள் இடுகையில் பல நல்ல ஆக்கங்கள் இடம் பெற்றுள்ளன. குறிப்பாக எழுத்து மற்றும் சொல் விளையாட்டு என்பன அருமையாக உள்ளன. இதுவரை அவற்றை முழுமையாக நான் பார்வை இடவில்லை என்பதை இட்டு வருந்துகிறேன்.

    உங்கள் நண்பன் மற்றும் நிகர் தமிழன் என்ற முறையில் உங்கள் எழுத்தில் இருக்கும் சில குறைகளை சுட்டி காட்ட முனைகிறேன், உங்கள் தமிழில் ஓரளவுக்கு சில ஆரிய சொற்கள் கலந்து உள்ளன அவை என் உள்ளத்திற்கு சிறு நெருடலை தூண்டுகின்றன. குறிப்பாக இக்கால கட்டத்தில் நாம் அனைவரும் அறிந்த ஒன்று தமிழுக்குள் கலக்கபடுகின்ற ஆங்கில சொற்கள் அவற்றை தவிர்த்து முழுமையாக நல்ல தமிழில் நீங்கள் எழுதுவது மகிழ்ச்சி அளித்தாலும் இந்த ஆரிய தொல்லை நம்மை விடுவதாய் இல்லை.

    இன்னும் வேர் ஊன்றி சொல்ல போனால் எம்மில் பல பேருக்கு ஆரியம் ஒரு நுண் உயிராய் இருந்து தமிழின் பெருமையை கெடுத்து வருகின்றது என்பது தெரிவதில்லை, இங்கே நீங்கள் பயன் படுத்திய சில சொற்கள் தமிழ் அல்ல

    எடுத்துகாட்டாக(உதாரணம்)
    கவிதை, கதை, சமுதாயம், ஆர்வம், உருவம், காரியம், காரணம்

    இப்படி பல ஆரிய சொற்கள் இருக்கின்றன, அவற்றையும் களைவது தான் சிறப்பாய் இருக்கும் என நம்புகின்றேன்.

    மன்னிக்கவும் உங்களின் உள்ளம் துயர் படும் வகையில் ஏதும் பதிப்பித்திருந்தால், உங்கள் தமிழ் பணி மேலும் மெருகேர என் வாழ்த்துகள்

    இப்படிக்கு
    தமிழறிவன்

    Like

    மறுமொழி
    • நானும் தமிழில் மேதை இல்லை! என் விருப்பத்தை(ஆர்வத்தை) வளர்த்துக்கொண்டு இதை பணியாக செய்கிறேன்! என்னுடய “பார்வையாளர்களுக்கு” பக்கத்தை படித்தால் உங்களுக்கே உண்மை விளங்கும்! 🙂

      பிற மொழி கலவாது எழுத முயற்சிக்கிறேன்! வாழ்த்துகளுக்கு நன்றி!

      Like

      மறுமொழி

  9. தமிழறிவன்

    மார்ச் 24, 2010

    காரியம் – செயல்
    உருவம்(ரூபம் -சமஸ்கிரதம்) – தோற்றம், வடிவம்
    வயது – அகவை
    மேதை – அறிஞன்
    சமுதாயம் – குடி, இனம் (இடம் பொருள் ஈவல் அறிந்து இதன் தன்மை மாறுபடும்)
    அடுத்த முறை சமுதாயம் என்று சொல்லும் போது எம் இனத்தின் என்று அல்லது இந்த குடியின் என்று பயன் படுத்தலாம்
    கவிதை – பா அல்லது பாடல் (சிலர் புது கவிதை என்பதை புது பா என்று பயன்படுத்துகின்றார்கள்)
    விரதம் – நோன்பு
    சக்தி – வலு
    கிருமி – நுண் உயிர்

    இந்த சொற்கள் உங்களுக்கு பயன் அளிக்கும் என்று நம்புகின்றேன், வேலை பளுவின் ஏதுவாய் நிறைய சொற்களை கொடுக்க முடியாமைக்கு வருந்துகிறேன், அடுத்து முறை இன்னும் கனமான சொற்களை தருகின்றேன்

    Like

    மறுமொழி
    • தமிழ் மொழிக்குள் பிற மொழிகளின் சொற்கள் நிறைய கலந்து விட்டன. இதற்கு என்ன கரணியம்(காரணம்) இருக்கும் என்று அலசிப் பார்த்தால் சில கலைகள் தமிழ்நாட்டிற்கு வெளியில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டன(கர்நாடக இசை). தமிழ் மரபிலும் இயல், இசை, நாடகம் இருந்திருந்தாலும், அவை “கூத்து” என்ற வடிவில் தான் மிகையாக இருந்தது. “கலைகள்” வெளியே இருந்து உள்ளே வரும் பொழுது, சில சொற்களும் உள்ளே புகுந்து விட்டன. எழுத்து வழக்கிலும், அந்த சொற்கள் உள்ளே புகுந்ததால், உண்மையான பல தமிழ் சொற்கள் அழிந்து போயின.(காட்டாக : “கதாபாத்திரம்” – தமிழ் அல்ல! அதற்கு தமிழ் சொல் யாராவது கூறுங்கள்!)

      சிலர் கதை, கவிதை, மேதை, உருவம், காரணம் போன்ற சொற்கள் தமிழ் இல்லை என்று கருதுகின்றனர். ஏனென்றால் அதே ஒளியமைப்பு கொண்ட சொற்கள் பிற மொழிகளில் இருப்பதால். சற்று சிந்தித்து பார்த்தால் சில சொற்கள் தமிழில் இருந்து அங்கே போயிருக்கலாம்! தமிழ் சொற்களுக்கு சில விதிகள்(எழுத்து விதிகள், முன்னொட்டு விதிகள், பின்னொட்டு விதிகள், புணர்ச்சி விதிகள்,…) இருக்கும்.

      காட்டாக :
      “மே” என்ற எழுத்தில் தொடங்கும் பண்புப்பெயர்கள் “Highness”-ஐ குறிக்கும்!
      மேன்மை, மேல், மேடு, மேற்கு(Due to Western Ghats mountains)
      இதை கருத்தில் கொள்ளும் பொழுது “மேதை” தமிழாக இருக்கலாம்!

      தமிழ்நாட்டில் இருக்கும் பலர் “பேசுதல்” என்று குறிப்பிடுவதை இலங்கைத்தமிழர்கள் “கதைத்தல்” என்று தான் கூறுகின்றனர்! இலங்கைத்தமிழில் “ஆரிய” மொழி கலவை இருப்பதாக எனக்குத் தெரியவில்லை! எனவே “கதை” தமிழாக இருக்க நிறைய வாய்ப்பு இருக்கிறது!

      உருபு, உருவகம் எல்லாம் தமிழ் என்றால் “உருவம்” தமிழாக இருக்கலாம்!

      “Logic” என்ற சொல்லுக்கு தமிழில் “ஏரணம்” என்பது உண்மைஎன்றால் “Reason” என்பதற்கு தமிழில் “காரணம்” என்றிருக்க நிறைய வாய்ப்பிருக்கிறது!

      எனவே கண்மூடித்தனமாக சொற்கள் தமிழில்லை என்று கூறாமல் சிறிது ஆராய்ந்து பார்க்கலாம்!

      “மொழி வெறி” வேண்டாம்! நான் கூறியதில் தவறிருந்தால் மன்னிக்க வேண்டும் “தமிழறிவா”!

      வேலை பளுவின் ஏதுவாய் நிறைய சொற்களை கொடுக்க முடியாமைக்கு வருந்துகிறேன், அடுத்து முறை இன்னும் கனமான சொற்களை தருகின்றேன்

      இப்படிக்கு
      பலராமன்

      Like

      மறுமொழி
      • ஏன் அப்படித்தான் இருக்க வேண்டுமா என்ன? இச்சொற்கள் தமிழிலிருந்தும் பிற மொழிகளுக்குச் சென்றிருக்கலாம் அல்லவா?

        Like

        மறுமொழி

  10. Dhanush

    மே 1, 2010

    superb, ithelam enga irunthu da varuthu

    Like

    மறுமொழி
  11. MAATRUKURAL FOR MIMICRY . A NEW WORD I AM HEARING. FOR THE FIRST TIME.

    Like

    மறுமொழி
  12. keep doing your service for divine tamil.

    Like

    மறுமொழி
  13. Good job. I am really proud of you pa. Now also i remember your childhood galattas in vivekananda school,sholavandan.
    I studied in that school (Your anna karthick’s classmate).

    Like

    மறுமொழி
  14. migavum nalarkuthuuu 🙂

    Like

    மறுமொழி
  15. en ennangalai nan palli paruvathil payinra tamil vaarthaigalai kondu tamilil pathivu seithaal ….en vayathu udaivargalidam irunthu enku varum mothal vimarsanam …tamil vaarthai puriyavilaiii enruuu …apothu kalangiya en manam inru ungaludaya pakathil tamil matum ulathaiii paarthuu aanndham

    Like

    மறுமொழி
  16. nice…let me know ur gmail id.

    Like

    மறுமொழி
  17. வணக்கம் திரு பலராமன் ….நீங்கள் “கதாபாத்திரம்” என்ற சொல்லுக்கு நிகரான தமிழ் சொல்லைக் கேட்டிருந்தீங்க. இந்த சொல்லுக்கான தமிழ் சொல்லை நானும் வெகு நாட்களா தேடி வந்தேன் கிடைக்காத காரணத்தினால், நான் கிழுள்ள சொல்லை கண்டுபிடித்தேன்.

    கதாபாத்திரம் — இந்த சொல் பொதுவாக திரைபடத்துறையினாரால் பயன்படுத்தப்படுகிறது ஆகையால் “திரைக்கோலம்” என்ற சொல் சரியாக இருக்கும் என்று நினைக்கிறேன்.

    கோலம் என்ற சொல்லுக்கு வேடம் என்ற பொருளும் உண்டு (எ. க தலை விரிக்கோலம்). நாம் வழக்கு தமிழில் பேசும்போதும் “இது என்ன கோலம்” என்று குறிபிடுகின்றோம். மேலும் வேடம் என்பது “வேஷம்” எனும் வடமொழி சொல்லின் தமிழாக்கம்.

    “திரைக்கோலம்” என்ற சொல்லை பற்றிய உங்கள் கருத்தென்ன??

    Like

    மறுமொழி
    • //“திரைக்கோலம்” என்ற சொல்லை பற்றிய உங்கள் கருத்தென்ன??//
      இதுவும் நன்றாகத் தான் இருக்கிறது. நானும் இதற்கு சில சொற்கள் தேர்ந்தெடுத்து வைத்திருந்தேன். “திரையாளுமை” (அல்லது) “கதைமாந்தர்” என்றும் குறிப்பிடலாம் என்று நினைக்கிறேன்.
      உங்கள் முயற்சிக்கு வாழ்த்துகள். கருத்துக்கு நன்றி.

      Like

      மறுமொழி
  18. உங்கள் மின்னஞ்சல் அனுப்புங்கள்.

    Like

    மறுமொழி
  19. Hi, Just stumbled upon your blog, can you send me your email address

    Like

    மறுமொழி

  20. ராதாகிருஷ்ணன்

    ஏப்ரல் 3, 2014

    அற்புதம் சார். மிகவும் சிறப்பு

    Like

    மறுமொழி
  21. நீங்கள் தமிழில் எழுத நினைத்ததற்கே ஆயிரம் பூங்கொத்துகள் உங்களுக்கு உங்கள் பணிதொடர வாழ்த்துகள்

    Like

    மறுமொழி
  22. //தமிழ் மொழிக்குள் பிற மொழிகளின் சொற்கள் நிறைய கலந்து விட்டன. இதற்கு என்ன கரணியம்(காரணம்) இருக்கும் என்று அலசிப் பார்த்தால் சில கலைகள் தமிழ்நாட்டிற்கு வெளியில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டன(கர்நாடக இசை).//

    மூன்றுவருடங்களுக்கு முன் நீங்கள் எழுதியது. நீங்கள் ஒருவருக்குப் பதில் சொன்னபோது “எனவே கண்மூடித்தனமாக சொற்கள் தமிழில்லை என்று கூறாமல் சிறிது ஆராய்ந்து பார்க்கலாம்!” என்று மிகச் சரியாகவே சொல்லியிருந்தாலும் நீங்களும் தமிழை முழுமையாக அறியவில்லையோ எனத்தோன்றுகிறது. சமஸ்கிருதமே தமிழிலிருந்து உருவாக்கப்பட்ட ஒரு செயற்கை மொழி என்றே புதிய ஆய்வுகள் சொல்லுகின்றன. தமிழறிவன் எடுத்துக்காட்டிய சொற்கள் மட்டுமல்ல கருநாடக இசையும் தமிழரதே. வெளி என்றே ஒன்று இல்லை. பாரதம் முழுவதும் தமிழர்களே வாழ்ந்தார்கள். நீங்கள் ஏற்கனவே பார்க்காதிருந்தால் தமிழ்ச் சிந்தனையாளர் பேரவை அவர்களின் you tube சேனலைக் கட்டாயம் பார்க்கவும். http://www.youtube.com/user/tamilsantham

    Like

    மறுமொழி
    • நீங்கள் கொடுத்த இணையத்தொடுப்பில் உள்ள நிகழ்ப்படங்களைப் பார்க்கிறேன். ஆனால், எனக்கு தெரிந்தவரைத் தமிழ் ஒரு திராவிட மொழி, சமசுகிருதம் ஒரு ஆரிய மொழி. தமிழிலிருந்து அது வந்திருக்கும் எனக் கூறப்படுவது ஏற்றுக்கொள்ளும்படி இல்லை. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

      Like

      மறுமொழி
  23. அந்த நிகழ்ப்படங்களைப் பார்க்கிறேன் என்றதற்கு நன்றி. ஆனாலும் //தமிழிலிருந்து அது வந்திருக்கும் எனக் கூறப்படுவது ஏற்றுக்கொள்ளும்படி இல்லை// என்று எப்படி ஐயா pre-conceived notion-ஓடு நீங்கள் ஆரம்பிக்கமுடியம்? //எனக்கு தெரிந்தவரை// என்று நீங்களே உங்கள் ஐயப்பாட்டை வெளிப்படுத்தி இருக்கிறீர்கள். நீங்கள் அந்த நிகழ்ப்படங்களைப் பார்த்தபின்னர் பேசுவோமே!

    Like

    மறுமொழி
  24. தமிழிலிருந்து சமசுகிருதத்தில் நிறைய சொற்கள் ஏற்றுமதி செய்யப்பட்டது(அங்கிருந்து இங்கும் தான்!) தெரியும். ஆனால், அந்த மொழியே தமிழிலிருந்து உருவானது என்று நீங்கள் சொல்வது சரியில்லை என்று சொன்னேன். மொழியியல் நிபுணர்கள் பிரித்தறிந்த மொழிக்குடும்பங்கள் அவை. நான் அவைப் பற்றி முழுமையாக படித்ததில்லை எனினும் இரண்டு மொழிகளும் வெவ்வேறு குடும்பம் என்பது நான் அறிந்ததே. //எனக்கு தெரிந்தவரை// என்பதை என் ஐயப்பாடாக கருத்தவேண்டாம். நன்றி.

    Like

    மறுமொழி
  25. //மொழியியல் நிபுணர்கள் பிரித்தறிந்த மொழிக்குடும்பங்கள் அவை.//
    அன்பரே, உலகம் அறிந்தது அடுத்த ஆய்வு வந்து நமது கருத்தைத் தவறு என நிறுவும் வரைதான். கல்லில் செதுக்கியது அல்லவே! பூமியைத்தான் மற்றவை சுற்றுகின்றன என நெடுநாள் நினைதுக்கொண்டிருந்தார்கள், கோபெர்நிகஸ் வரும்வரை. ஒளியின் வேகத்தை மிஞ்சமுடியாது என ஐன்ஸ்டைன் கூறியதை தவறு என்று நம் மலையாளி சுதர்ஷன் பின்னர் கண்டுபிடித்தார். அறிவியலிலேயே அப்படி இருக்கும்போது மொழியியலில் கேட்கவா வேண்டும்! நீங்கள் தமிழ்ச் சிந்தனையாளர் பேரவையின் இணையப்படங்களைப் பார்த்தபின் பேசுவோம் அய்யா!
    http://www.youtube.com/user/tamilsantham.

    // //எனக்கு தெரிந்தவரை// என்பதை என் ஐயப்பாடாக கருத்தவேண்டாம்.//
    எனக்குத் தெரிந்தவரை என்று ஒருவர் சொன்னால் அவர் தனக்குத் தெரியாதது ஏதாவது இருக்கலாம் என்றுதானே உணர்த்துகிறார்! அதுவும் ஐயப்பாடுதானே! எப்படிப்பார்த்தாலும் ஐயத்துக்குரிய ஒன்றைத் திடமாக நம்புவதைவிட ஐயப்பாட்டுடன் இருப்பதே மேல், நண்பரே!

    இவ்வளவு தமிழார்வம் கொண்டுள்ள நீங்கள் தமிழைப் பற்றி இன்னும் அறிந்தால் அந்த ஆர்வம் இன்னும் பலமடங்கு கூடவே செய்யும்! வாழ்த்துகிறேன்.

    Like

    மறுமொழி
    • “எனக்கு தெரிந்தவரை உலகம் கதிரவனைத் தான் சுற்றிவருகிறது!” என்று சொல்வதில் ‘எனக்கு தெரிந்தவரை’ ஐயம் இல்லை. கொஞ்சம் நக்கல். 🙂

      இருப்பினும் நீங்கள் கொடுத்த சுட்டியைப் பார்க்கிறேன் நேரம் கிடைக்கும் பொழுது. அதில் கண்டிப்பாக புதிதாக ஏதாவது அறிய வாய்ப்பிருக்கும். நன்றி.

      Like

      மறுமொழி

உங்கள் கருத்து என்ன?