அகக்கண்ணாடி

Posted on ஒக்ரோபர் 8, 2022

4


முன்குறிப்பு: இப்போது நீங்கள் படிக்கப்போகும் இந்தக் கதை சில இடங்களில் முகம் சுளிக்க வைக்கலாம். சில காட்சிகளோ, பேச்சுக்களோ அகவை வரம்பை மீறியவர்களுக்கு மட்டுமே புரியும். பழமைவாதத்தில் ஊறியவர்களும் இந்தக் கதையைத் தவிர்த்துவிடவும். எனவே இது ஒரு 18+ கதை.

TRIGGER WARNING: இந்தக் கதையில் sexual violence பற்றின விளக்கங்கள் உள்ளன.


“டே… குவிரா!!! என்னடா இது? உன்னோட room’ஐயே lab மாதிரி மாத்தி வச்சிருக்க?” என்று வியப்புடன் குவிரனின் அறைக்குள் நுழைந்தான் ஆதன். 

குவிரனும் ஆதனும் பள்ளிக்காலத்திலிருந்தே நண்பர்கள். ஒவ்வொரு ஆண்டும் அவர்கள் இருவருக்குள் தான் அதிக மதிப்பெண்கள் எடுத்து முதலிடம் பிடிக்கும் போட்டி இருக்கும். இருவரும் படிப்பில் சிறந்தவர் என்றபோதிலும் மற்ற பொழுதுபோக்கிலும் பங்குகொள்பவர்கள். கல்லூரியிலும் இவர்களுடைய நட்பு மேலும் வலுவாகத் தொடர்ந்தது. இருவரும் இன்னொருவரின் வீட்டுக்கு செல்வது வழக்கமானதால் இவர்களுடைய பெற்றோர்களுக்கும் இவர்கள் இருவரையும் நன்றாகத் தெரியும். 

“ஆமா டா. Semester holidays ரொம்ப நாள் இருக்குன்னு bore அடிச்சு போயி ஒரு project பண்ண ஆரம்பிச்சேன். அதான் room இப்படி இருக்கு!” என்றான் குவிரன். 

“இது என்ன VR Glass மாதிரி என்னமோ இருக்கு? இத வச்சு என்ன பண்ணிக்கிட்டு இருக்க?” என்று புருவம் உயர்த்தினான் ஆதன்.

வாய் மேல் விரல் வைத்து அமைதியாக இருக்கும் படி சைகை செய்துவிட்டு அறையின் கதவை மூடி தாழை அடைத்தான் குவிரன். ஆதனுக்கு ஆவலால் தவிப்பு கூடியது. அந்த ஆவலுடன் ஆதன் கேட்க வந்தக் கேள்வியைக் குவிரனின் குரல் தடுத்தது. 

“X-ray எப்படி கண்டுபிடிச்சாங்க தெரியுமா?”

“Accidental’ஆ”

“Correct. கிட்டத்தட்ட அதே மாதிரி நான் ஒன்னு கண்டுபிடிச்சிருக்கேன். XXX-ray’ன்னு இப்போதைக்கு பேரு வச்சிருக்கேன்.”

“புரியல டா. என்ன சொல்ல வர்ற?”

“நான் கண்டுபிடிச்ச rays எந்த வகையான fabric மேல பட்டாலும் அதைத் தாண்டி ஊடுருவிப் போயிரும். ஆனா, human skin அளவு thick’ஆன material மேல பட்டுச்சுன்னா மட்டும்  reflect ஆயிரும்!”

“ஓ! நீ எங்க வர்ரன்னு கொஞ்சம் புரியுது. இத வச்சு humans’ஐ nude scan எடுக்கலாம். Correct’ஆ?”    

மெல்லிய சிரிப்பை உதிர்த்த குவிரன் அவன் மேசை மேல் வைத்திருந்த கண்ணாடியை உற்றுப் பார்க்கும் படி கை காட்டினான்.

“இந்தக் கண்ணாடில top-right corner’லையும் top left corner’லையும் ரெண்டு image capturing sensors இருக்கு. இது continuous’ஆ நான் சொன்ன XXX-ray’வ emit பண்ணிக்கிட்டே இருக்கும். அது மூலமா வர்ற படத்தை கிட்டத்தட்ட real-time’ல capture பண்ணும். ஏன்னா exposure time கொஞ்சம் தேவை. அது மட்டுமில்ல. இந்த rays focused’ஆ ஒரு object மேல படணும். அதுக்கு தான் center’ல இங்க ஒரு normal camera இருக்கு. அதுல நான் deep learning use பண்ணி build பண்ண human identification system இருக்கு. கிட்டத்தட்ட real-time’ல normal camera’ல record பண்ண படத்துல humans’ஐ மட்டும் என் XXX-ray camera’ல record பண்ண image வச்சு superimpose பண்ணி இந்தக் கண்ணாடிக்குள்ள இருக்க display வழியா காட்டும்.”  

மூச்சு வாங்க தனது தயாரிப்பை விளக்கிய குவிரனுக்கு மௌனத்தை பதிலாய் அளித்தான் ஆதன்.

“ஆதன், என்னடா ஆச்சு நான் சொன்னது புரியலையா?”

“மொத்தத்துல இந்தக் கண்ணாடியப் போட்டா போற வர்றவங்களையெல்லாம் nude’ஆ பார்க்கலாம். அதான?”

“என்னடா? ஒரு மாதிரி எளக்காரமா கேக்குற? அது தான். ஆனா, மொதல்ல dress’ஓட தெரியுற உடம்புகள் எல்லாம் என்னோட superimposition magic நடந்த உடனே அம்மணமா தெரியும். ஒரு அஞ்சு second ஆகலாம் அதுக்கு.”  

“ம்ம்ம்ம்…”

மீண்டும் ஆதமின் மௌனம் தொடர்ந்தது. அதனால் தயக்கமடைந்த குவிரன் மீண்டும் பேச்சைத் தொடங்கினான்.

“என்ன டா? அமைதி ஆயிட்ட? எல்லா ஆண்களோட fantasy’க்கும் சேர்த்து இப்படி ஒரு கண்ணாடி உருவாக்கிருக்கேன். ஒண்ணுமே சொல்லாம சும்மா உம்முன்னு இருக்க?”

“என்னது? எல்லா ஆண்களுமா? என்னைய அந்த list’ல சேர்க்காத! இது அடுத்தவங்க வீட்டுக்குள்ள எட்டிப்பார்க்குற மாதிரி. இது voyuerism டா!”

“ஆமா, யாரு இல்லைன்னு சொன்னா? ஆனா, Porn videos பார்க்குற நீயெல்லாம் இந்த advice கொடுக்குறது கொஞ்சம் over டா! You’re a hypocrite.”

“யப்பா… நான் ஒன்னும் scandal videos’ஓ changing room’ல camera மறச்சு வச்சு எடுத்த videos’ஓ பாக்குறதில்ல. ரெண்டு porn actors அவங்களோட consent’ஓட நடிச்ச videos’அ தான் பாக்குறேன்.”

“ஓ! அதனால நீ உத்தமனா? கடைசியா அதப் பார்த்து masturbation தான பண்ணுவ? அது மட்டுமில்ல. இப்படியே Porn videos’ஆ பார்த்துட்டு போனா உன்னோட girlfriend கூடவும் unusual sexual expectations தான் இருக்கும். உங்க relationship கூட அதுல பாதிக்கலாம்.”

“யப்பா… திடீர்னு relationship advisor ஆகிட்டியா நீ?”

“சரி, நான் ஒன்னு கேக்குறேன். கல்யாணத்துக்கு முன்னாடி இங்க யாருமே sex வச்சிக்கிறதில்லன்னு சொல்றியா? அல்லது extra marital affairs எதுவுமே இங்க இல்லன்னு சொல்றியா? Sexual gratification ஒவ்வொருத்தவங்களுக்கும் ஒவ்வொரு மாதிரி இருக்கும். தப்பு செய்றவன் மாட்டாத வரைக்கும் உத்தமன் தான்.”

“இப்ப என்னதான் சொல்ல வர்ற? நம்ம நாட்டுல cultural restrictions’ஆல பாலியல் வறட்சி இருக்கு! அது தான் இந்த மாதிரி problems உருவாக்குதுன்னு சொல்றியா?”

“Exactly. Prostitution’அ legalize பண்ணுனா எதுக்கு எனக்கு இந்த மாதிரி fantasies தோணப்போகுது. 18 வயசு ஆகாத பெண்ண sex worker’ஆ license கொடுக்க முடியாதுன்னு சொல்லி தடுக்கலாம். Sex workers’க்காக நடக்குற abductions’அ குறைக்கலாம். ஆனா, இதெல்லாம் இங்க பேச முடியாது. இன்னும் condom வாங்க கடைக்கு போறதே taboo topic தான் இங்க!”

“ஆரம்பிச்ச எடத்துல இருந்து நீ வேற எங்கயோ போயிட்ட. நான் பேசிட்டு இருந்தது consent பத்தி. Consent இல்லாம தொடுறது rape’ன்னா, consent இல்லாம ஒருத்தவங்களோட உடம்ப பார்க்குறதும் rape தான்!” 

இதைக் கேட்டதும் கோபம் தாளாமல் எதிர் திசையில் விரைந்து நடந்தான் குவிரன். அங்கிருந்த நீர்குப்பியைத் திறந்து மடமடவென்று நிறைய நீர் குடித்துவிட்டு பின்பு வெடுக்கென்று திரும்பி ஆதனைப் பார்த்தான். அதே வேகத்துடன் அவனை நோக்கி அவன் முகத்துக்கு நேராக வந்து மெலிதாக போலிப்புன்னகை செய்தான்.

“ஆமா டா! நான் rape தான் பண்ணப்போறேன். மொதல்ல ரெண்டு ஆம்பளைங்க உக்காந்து sex பத்தி பேசுறதே கேவலம். நீ கெளம்புடா சாமி!”

“மறுபடியும் தப்பு பண்ற டா… பொறுமை இழந்து பேசிக்கிட்டு இருக்க நீ. என்னோட friend ஒருத்தன் gay. ஒரு ஆம்பளைக்கு இன்னொரு ஆம்பளை மேலயும் sexual attraction வரலாம் டா!” 

“ஆமா, இங்க எல்லாத்துக்கும் கொடி தூக்க ஆள் இருக்கு. Sex’ங்கறதே reproduction’க்காக ஒரு கருவி தான். அது எப்படி டா ஆம்பளைக்கும் ஆம்பளைக்கும் நடக்கும். அது ஒரு unnatural sex. அவ்வளவு தான்!”

“ஓ! அப்ப நம்ம natural’ஆ இருப்போமா? Natural’ஆ நாம polygamous. அதாவது எந்த நாய் வேணும்னாலும் எந்த நாய் கூடனாலும் sex வச்சுக்கலாம். அப்படின்னா one night stand, friends with benefits, extra marital affairs எல்லாமே normalise ஆகிரும். அது Okay தானா?” 

“எனக்கு Okay தான். கல்யாணமே ஒரு societal restriction தான். புடிச்சவங்களோட Living together relationship’ல இருப்பேன். புடிக்கலன்னா கிளம்பிட்டே இருக்கலாம். அடுத்து நமக்கு புதுசா புடிச்சவங்களோட திரும்ப சேரலாம். ஒரு வாழ்க்கை தான் டா நமக்கு இருக்கு. அத எதுக்கு சுருக்கணும்?”

“ம்ம்ம்ம்” என்று மீண்டும் அமைதியானான் ஆதன்.

குவிரன் கதவருகே சென்று பூட்டிய தாழைத் திறந்து விட்டு, “போயிட்டு வா. பேசுனதெல்லாம் நெனச்சு கோவப்படாத. நான் இந்தக் கண்ணாடிய வெளிய போயி போட்டு பார்த்து test பண்ணப் போறேன். பொம்மைக்கு துணி போட்டுவிட்டு test பண்ணி பார்த்து பார்த்து bore அடிச்சிருச்சு.” என்று கூறிவிட்டு கண்ணடித்தான். ஆதனும் ஒரு கோபத்தையும் காட்டாமல் வெளியே கிளம்பினான். “என்னப்பா? அதுக்குள்ள கிளம்பிட்ட? கொஞ்சம் சாப்பிட்டுட்டு போப்பா!” என்று தடுத்த குவிரனின் அன்னையிடம் “இல்லம்மா, இன்னொரு நாள் வர்றேன்!” என்று சொல்லிவிட்டு வெளியேறினான் ஆதன். 

அந்த மாயக்கண்ணாடியை சட்டையின் கழுத்துப்பட்டையில் அணிந்து கொண்டு தனது உந்துருளி வண்டிச்சாவியை எடுத்துக்கொண்டு பின்னாடியே வந்தான் குவிரன். “என்னடா? இப்ப தான் ஆதன் கிளம்புனான். நீ இப்ப தனியா கிளம்பி போற?” என்று வினவிய தாயிடம், “நான் புதுசா VR’உம் AR’உம் சேர்த்து ஒரு research பண்ணிட்டு இருக்கேன் மா. அதப்பத்தி தான் பேசிட்டு இருந்தோம். அவனுக்கு வேற வேலையிருக்குன்னு கிளம்பிட்டான். நான் என்னோட இந்த புது கண்ணாடிய test பண்ணுறதுக்கு கிளம்புறேன் மா!” என்று பதிலுரைத்தான் குவிரன். “என்னது நீயே செஞ்ச கண்ணாடியா? அதப் போட்டு style’ஆ pose கொடு டா! நான் photo எடுக்குறேன். Whatsapp’ல status வைக்கணும்” என்று வியப்பும் விருப்பமும் கலந்து கேட்டுக்கொண்டாள் குவிரனின் தாய். “ச்ச்சீ… அம்மா… விலகுங்க மா! எதுக்கெடுத்தாலும் social media status அது இதுன்னுட்டு இருக்கீங்க!” என்று கடிந்து கொண்டு விலகிச் சென்றான். ஆனால், அந்நிகழ்வு அவனை கொஞ்சம் உறுத்தியது.  

இருந்தாலும் எடுத்த முடிவில் எவ்வித மாற்றமும் செய்யாமல் மின்தூக்கியில் வண்டிகள் நிற்கும் தளத்துக்கு சென்றான். அவன் தங்கியிருக்கும் அடுக்குமாடி குடியிருப்பில் பலரை அவன் சந்தித்தது கூட கிடையாது. அப்படி ஒரு பெண் அவன் எதிரே வருவதைக் கண்டதும் கழுத்துப்பட்டையில் இருந்த கண்ணாடியை எடுத்து கண்களில் அணிந்து கொண்டு அவளை உற்று நோக்கினான். ஒரு இருபத்தைந்து அகவை மதிக்கத்தக்க ஒரு பெண் அவள். பழுப்பு நிறக் கூந்தலோடு நெஞ்சை நிமிர்த்திக்கொண்டு நடந்து போய்க் கொண்டிருந்தாள். ஐந்து நொடிகள் ஆனதும் கொஞ்சம் கொஞ்சமாய் அவளுடைய ஆடை விலகியது அவன் அணிந்திருந்த கண்ணாடியின் திரைக்குள். அவளையே உற்றுப் பார்த்து கொண்டிருந்த குவிரன் பேரதிர்ச்சி அடைந்தான். அவளுக்கு வலது பக்கத்தில் மட்டும் தான் முலை இருந்தது. இன்னொரு பக்கம் முலை வெட்டியெடுத்து தைத்த தழும்பு தான் இருந்தது. ஆனால் மார்புக்கு நடுவில் அவள் அணிந்திருந்த கழுத்துச்சங்கிலியில் சிலுவை ஒன்று பளீர் என்று மின்னியது.    

ஒன்றும் புரியாத மனநிலைக்கு சென்ற குவிரன் கண்ணாடியை அகற்றி மீண்டும் கழுத்துப்பட்டையிலே வைத்துவிட்டு வண்டியை எடுத்துக்கொண்டு சாலையில் வேகமாக சென்றான். அருகில் இருக்கும் பெண்கள் கல்லூரி வாசலில் நின்றது அவனுடைய வண்டி. கல்லூரி நேரம் முடிந்து வாசல் வழியாக கூட்டம் கூட்டமாக அழகழகான பெண்கள் வந்தார்கள். அவனை அறியாமலேயே தானாக அவனது கைகள் அந்தக் கண்ணாடியை எடுத்து கண்களில் அணிந்து கொண்டது. வாசல் வழியாக வந்த ஒவ்வொருவரின் உடலையும் பார்த்து களிப்படைந்தான். ஆனால், சிலரின் பெண்ணுறுப்பில் குருதி வழிவதைப் பார்த்ததும் மீண்டும் அவனுக்கு மனத்தடை ஏற்பட்டது. முகம் சுளித்த படியே இன்னொரு பக்கம் திரும்பினான். அங்கே ஒரு பள்ளிக்கூடம் இருந்தது. அந்தப் பள்ளி வாசலில் ஒரு சிறுவன் காலை அகல விரித்த படி நடந்து வந்து கொண்டிருந்தான். தலையில் வெள்ளை நிற தொப்பி அணிந்த ஒருவர் அந்தச் சிறுவனைக் கையைப் பிடித்துக் கொண்டு மெதுவாக கூட்டிச் சென்று கொண்டிருந்தார். இந்தக் காட்சியை அவன் கண்ணாடி வழியாக கூர்ந்து கவனிக்கும் பொழுது அந்தச் சிறுவனுடைய ஆண்குறியின் நுனியை குருதி படிந்த கட்டு சுத்தியிருந்தது தெரிந்தது. வானில் ஓர் இடி முழங்கியது.

மேகம் இருண்டு வந்து மழை வருவதுபோல் இருந்தது. சற்று கணத்த மனதுடன் வண்டியை எடுத்துக்கொண்டு அங்கிருந்து சென்றான் குவிரன். மழைத்தூறல் அவனுடைய பயணத்தைக் குளிரூட்டியது. சிறுநீரகம் நிரம்பி முட்டிக்கொண்டு வந்தது குவிரனுக்கு. நல்லவேளையாக பக்கத்திலேயே ஒரு பொது கழிப்பிடம் இருந்தது. அங்கு சென்று அவசரமாக சில்லறையை எடுத்து கொடுக்க முன்வந்தவனுக்கு, இருக்கும் இடத்துக்கு பொருந்தாதவாறு வந்த பூக்களின் நறுமணம் அவனை திசைதிருப்பியது. புத்தர் படம் பதித்த மஞ்சள் நிறச் சட்டையும் பச்சைப் பாவாடையும் அணிந்திருந்த ஒரு பெண்ணுருவம் பக்கத்தில் இருக்கும் பெண்கள் கழிவறை முன்பு நின்று தீவிரமாக செல்பேசியில் பேசிக்கொண்டிருந்தது. அவள் இந்தப் பக்கமும் அந்தப் பக்கமுமாக நடந்துகொண்டே பேசும் நளினம் அவனை ஈர்த்தது. ஏதோ ஒரு நிறுவனத்தின் அடையாள அட்டையை கழுத்தில் தொங்கவிட்டிருந்தாள். மீன் வடிவில் இருந்த தெளிவான கண்களை கண்மை அழகாக சூழ்ந்திருந்தது. வடிவான உதடுகளை சாயம் பளபளப்பாக காட்டியது. 

உடனே குவிரன் கழுத்துப்பட்டையில் இருந்த கண்ணாடியை மீண்டும் அணிந்தான். அவள் படக்கென்று திரும்பி அவனை பார்ப்பது போல் தோன்றியதும் அவனும் செல்பேசியில் அழைப்பு வந்தது போல காதில் வைத்துக்கொண்டு பொய்யாக பேசிக்கொண்டிருந்தான். அவள் திரும்பியிருந்ததால் அவளுடைய பின்னழகை தான் முதலில் பார்த்தான். வட்டத்தின் நுனியருகே ஒரு புள்ளி வைத்ததைப் போல் ஒரு மச்சத்தைப் பார்த்ததும் குவிரனின் மூச்சுக்காற்று சூடானது. ஆனால், அவள் திரும்பியதும் பெண்ணுறுப்பு இருக்க வேண்டிய இடத்தில ஆணுறுப்பு இருந்ததைக் கவனித்தான். குழம்பிப்போன குவிரன் நிமிர்ந்து பார்த்தான். பெண்களுக்கு இருக்கும் மார்பகங்கள் போலவே தான் இருந்தன அவளுக்கு. பெண்கள் கழிவறை உள்ளே போனவர்கள் எல்லோரும் வந்துவிட்டார்களா என்று தயங்கி தயங்கி பார்த்த பின் தான் அவள் உள்ளே சென்றாள். அவளும் பொய்யான செல்பேசி அழைப்பை தான் இப்போது பேசியிருப்பாளோ என்ற ஐயத்தோடு தனக்குள்ளாக சிரித்துக்கொண்டான். அவன் வந்த வேலையை முடித்துவிட்டு மீண்டும் கிளம்பினான்.

போகும் வழியில் அவன் மூளையில் பல எண்ண ஓட்டங்கள் ஓடிக்கொண்டிருந்தன. கண்ணாடியை கூட கழட்ட மறந்துவிட்டு ஒட்டிக்கொண்டிருந்தான். அவன் எப்போதும் தேநீர் அருந்தும் கடைக்கு சென்று தலைவலியை குறைக்கலாம் என்று முடிவெடுத்து போய்க்கொண்டிருக்கும் பொழுது ஒரு தெருவுக்குள் செல்லும் போது அவனுடைய வண்டியின் உருளியில் ஓட்டை விழுந்தது. அப்படியே வண்டியை உருட்டிக்கொண்டு அருகில் இருந்த இயந்திரம் பழுதுபார்க்கும் இடத்திற்கு வந்தடைந்தான். அவர்களிடம் வண்டியை ஒப்படைத்துவிட்டு ஒரு நாற்காலியில் அமர்ந்திருந்தான். எதிரே ஒரு கட்டிடம் இருந்தது. அங்கே ஓர் ஆசிரியர் தனிப்பாடப் பயிற்சி எடுப்பதாக ஒரு பலகை மாட்டப்பட்டிருந்தது. ஆனால், வாசலில் இரண்டு செருப்புக்கள் தான் இருந்தன. நீண்ட நேரம் கழித்து ஒரு பள்ளி மாணவன் மட்டும் வெளியே வந்தான். அவனுடைய கண்கள் கலங்கியிருந்தன. வலியுடன் மெதுவாக நடந்து சென்ற அவனுடைய பின்புறத்தைப் பார்த்த குவிரன் திகைத்துப் போனான். அந்த மாணவனின் பின்புற ஓட்டை வழியாக குருதி கசிந்து கொண்டிருந்தது. “வண்டி ready ஆயிருச்சுப்பா!” என்ற குரல் அவனை திசைதிருப்பியது. கண்ணாடியை அவிழ்த்துக்கொண்டு காசைக் கொடுத்துவிட்டு வண்டியை எடுத்து சென்றான்.

தடைகள் நிறைந்த பயணத்தை முடித்துவிட்டு ஒருவழியாக தேநீர் கடைக்கு வந்தடைந்தான் குவிரன். தேநீரை வாங்கி அருந்திக்கொண்டிருக்கும் பொழுதே தூறிக்கொண்டிருந்த மழை பெரிய மழையாக பொழிந்தது. கடைக்குள்ளே நின்றுகொண்டே வெளியே பார்த்தான். எதிர்புறத்தில் ஒரு பெரிய கோவில் இருந்தது.  அந்தக் கோவில் கோபுரம் முழுக்க எல்லா சிலையும் ஆடையில்லாமல் வெறும் உடம்பாய் தான் இருந்தன. இரண்டு ஆண்களும் நான்கு பெண்களும் சேர்ந்து புணர்வது போல ஒரு சிலை இருந்தது. ஒரு பெண் தன்னுடைய பெண்ணுறுப்பை தடவி பார்ப்பது போல இன்னொரு சிலை இருந்தது. ஓர் ஆண் தன்னுடைய ஆணுறுப்பை ஏந்தி நிற்பது போல ஒரு சிலை இருந்தது. மாட்டுடன் மனிதன் புணர்வது போல கூட ஒரு சிலை இருந்தது. அதையெல்லாம் பார்த்து ஒரு வெறுமையான சிரிப்பை உதிர்த்தான் குவிரன். 

அந்த நேரத்தில் கோவிலுக்கு உள்ளே இருந்து அவனுடைய கல்லூரியில் படிக்கும் மாணவி ஒருத்தி வெளியே வந்தாள். மிகவும் அழகானவள் அவள். கல்லூரியிலேயே நிறைய பேருக்கு அவள் மீது மையல் உண்டு. பொதுவாக அழகான பெண்களிடம் ஒரு விதமான இறுமாப்பு இருக்கும் என்பது குவிரனின் எண்ணம். ஆனால், அவள் மிகவும் அமைதியானவள். ஆண்களை நிமிர்ந்து கூட பார்த்து பேசமாட்டாள். மழையின் தீவிரத்தால் வெளியே போக முடியாமல் கோவில் வாசலிலேயே நின்றுகொண்டிருந்தாள் அவள். அவளிடம் பேசுவதே ஒரு ஆணுக்கு செருக்கு கொடுக்கும். அப்படி ஒரு அழகியை முழுவதுமாக பார்க்க வேண்டுமென்று தூண்டல் ஏற்பட்டு குவிரனுக்குள்ளே ஒரு மனப்போராட்டம் நிகழ்ந்தது. இறுதியில் அவனுடைய அறிவை அவனுடைய ஆணுறுப்பு மறைத்தது. அந்தக் கண்ணாடியை எடுத்து மீண்டும் அணிந்தான். அவளுடைய பெண்குறியை நோக்கினான். அவளுடைய இடையும் தொடையும் சேருமிடத்தில் “அப்பா” என்று கருப்பெழுத்துக்களில் எழுதி அதன் மேல் சிவப்பாக இரண்டு குறுக்குக்கோடுகள் போட்டு அந்தப் பெயரை அடித்திருப்பது போல பச்சைகுத்தப் பட்டிருந்தது. அவன் கண்ணாடியின் கீழே கண்ணீர்த் துளிகள் சிந்தின.

அருஞ்சொற்கள்:

Lab – ஆய்வுக்கூடம்
Semester – அரைக் கல்வியாண்டு
Project – செயல் திட்டம்
Virtual Relaity (VR) – தோற்ற மெய்மம்
Augmented Reality (AR) – மிகை மெய்மம்
Artificial Intelligence (AI) – செயற்கை நுண்ணறிவு
Machine Learning (ML) – பொறிக் கற்றல்
Deep Learning – ஆழக் கற்றல்
(ML) Model – சிற்றுரு
Prostitution – கலவியாக்கம்
Sex worker – கலவியாளர்
Hypocrite – முரண்வாதி
Condom – ஆணுறை
Taboo – விலக்கப்பட்ட
Consent – இசைவு
Rape – வன்புணர்வு
Porn – கலவிப்படம்
Polygamous – பலபுணரிக்குரிய
One-Night Stand – ஓரிரவுக் கூடல்
Friends With Benefits – பாலுறவு கொள்ளும் நட்பு
Extra marital affairs – திருமணத்தைத் தாண்டிய உறவுகள்

Advertisement