சமையலில் தேடல்

Posted on ஜனவரி 1, 2017

2


அனைவருக்கும் இனிய ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துக்கள்!

 
இக்கால மனிதனின் அடிப்படை தேவைகள் நான்கு – இணையம், உணவு, உடை, இருப்பிடம். இதில் இரண்டாவதாக இருப்பது உணவு. இந்த உணவை உருவாக்க உதவிடும் கலை தான் சமையல். வெளியூரில் வாழும் திருமணமாகாதவர்கள், புதிதாய் மணம் முடித்தவர்கள், மனைவியைப் பிரிந்து வெளிநாட்டில் வேலைப்பார்க்கும் ஆண்கள் என்று பலருக்கும் சமையல் புதிதாய்த் தேவைப்படும். நாள்தோறும் இல்லத்தில் சமைக்கும் பெண்களுக்கும் ஆண்களுக்கும் கூட சில நேரங்களில் சமையலில் ஐயம் ஏற்படலாம்.
 
சமையலில் ஐயம் ஏற்படும்போதெல்லாம் சமையல் நூலோ அல்லது தொலைப்பேசி மறுமுனையில் ஒரு தேர்ந்த ஆளோ தெளிவுபடுத்தலாம். அல்லது மனிதனின் முதன்மையான அடிப்படைத் தேவையான இணையத்தில் படித்தோ பார்த்தோ கற்றுக்கொள்ளலாம்.  இணையத்தில் சமையல் கலையைப் பார்த்து கற்றுக்கொள்ள ஒரு சுவையான தளம் தான் YouTube.
 
தொலைக்காட்சி இல்லாத வீடு என்பதால் எனக்கும் மனைவிக்கும் YouTube தான் பொழுதுபோக்கு. உணவு தவிர மற்ற எல்லாவற்றிலும் எங்கள் இருவருக்கும் நெரெதிர் சுவை என்பதால் பெரும்பாலும் நாங்கள் இருவரும் சேர்ந்து பார்ப்பது உணவு தொடர்பான நிகழ்ப்படங்களே! அதிலும் இந்திய உணவு வகைகளை விட மற்ற நாடுகளில் உள்ள புதிய உணவுமுறைகளைக் கற்றுக்கொள்வதில் மிகையான விருப்பம் எங்களுக்கு.
 
இவற்றினால் உந்தப்பட்டு சில நேரங்களில் பிற நாட்டு உணவு வகைகளை நம் நாட்டின் சுவைக்கு ஏற்றது போல் சமைத்துப்பார்ப்பதுண்டு. நிறைய நேரங்களில் அது புதுமையாகவும் நன்றாகவும் அமைந்துவிடும். இதனாலோ என்னவோ என் மனைவிக்கும் தன் சமையலை இணையத்தில் பதித்து பலருக்கும் பரப்ப வேண்டும் என்ற ஆவல் மிகுந்தது.
 
முதலில் சில கலவையான உணவு வகைகளைச் செய்து எங்கள் YouTube ஓடையில் பதிவிட்டு வந்தோம். பிறகு Twitter’இல் நம்மைப் பின்பற்றுபவர்கள் விரும்பிக் கேட்ட எளிமையான இந்திய உணவு வகைகளும் செய்து வந்தோம். இனி இன்னும் கொஞ்சம் புதுமையான உணவுகளும் அவ்வப்போது இடுவதாக திட்டம். என் மனைவியின் இந்த முயற்சியைப் பார்த்து என் குடும்பத்தினர் சிலரும், நண்பர்கள் சிலரும் எங்கள் குழுவில் இணைந்தது மகிழ்ச்சி.
 

எங்கள் குழுவின் பெயர் – Cookploration

புத்தாண்டில் பிறந்த பூவைக்கு என் அன்பு மனைவிக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்! 🙂  

buttertea10000views