நீண்ட நாட்களுக்கு பிறகு இன்று என் பதிவில் எழுதுகிறேன்.
எல்லா செயலுக்கும் ஒரு சின்ன உந்துதல் வேண்டும். அது போல நான் இந்தக் குறும்படம் எடுத்ததற்கும் ஒரு உந்துதல் இருந்தது. சிறிது காலமாகவே பெண்களுக்கு எதிரான வன்முறைகள் கூடியதாக தோன்றுகிறது. இந்தத் தலைமுறையிலும் பெண்கள் என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும் என்று ஒரு குறுகிய எண்ணம் ஆண்கள் பலரிடம் இருக்கிறது. இதுவே இப்படிப்பட்ட வன்முறைகள் நிறைய நடக்க காரணம் என்று நான் நினைக்கிறேன்.
இந்தத் தவறு எங்கே நடக்கிறது? கல்வியினாலா? திரைப்படங்களாலா? என்னைப் பொருத்தவரை ஒவ்வொரு வீட்டின் வளர்ப்பு சூழ்நிலை தான் இதற்கு முதன்மை காரணம் என்று தோன்றுகிறது. ஒரே வீட்டில் ஒரு ஆணையும் பெண்ணையும் ஒரே போலா வளர்க்கிறார்கள்? பெண்கள் என்றால் இப்படி நடக்கக்கூடாது என்று முதலில் கட்டுக்குள் வைப்பதே அந்தப் பெண்ணின் பெற்றோர்களாய் தான் இருப்பார்.
பெண்களுக்கு இழைக்கப்படும் வன்முறைகளுக்கு தொடக்கமாய் இருக்கும் இந்த மனநிலையை முதலில் ஒழிக்கவேண்டும். ஆண்களுக்கு இருக்கும் அதே விடுதலை பெண்களுக்கும் வேண்டும். பெண் என்பதனால் மட்டுமே ஒருவர் தான் விரும்பியதைச் செய்ய முடியாமல் போகக்கூடாது.
இந்தக் குறும்படத்தைப் பார்த்துவிட்டு படிப்பதைத் தொடரவும்.
இது ஒரு உண்மை நிகழ்வையொட்டி எடுத்த குறும்படம். அந்த உண்மை நிகழ்வை இங்கே படிக்கலாம்.
பெண்கள் என்றால் சில வரைமுறைகளுக்கு உட்பட்டவள் என்ற எண்ணத்தை முதலில் நீக்க வேண்டும். அது நடந்தால் பெண்கள் மீதான வன்முறைகள் தானாக குறையும்.
ஆண்களை குறை சொல்லாமல் பெண்ணியம் பேசும் குறும்படம் எடுத்ததில் எனக்கு மகிழ்ச்சி.
Posted on ஜூன் 28, 2016
0