விதை கவிதை

Posted on செப்ரெம்பர் 7, 2012

31


9 சொற்களில் 11 வரிக்கவிதை இதுதான்!

விதை புதைந்தாலும் மண்ணில்
சாகாமல் போராடி மீண்டும்
துளிர்விட்டு வெளிவந்து வளரும்!

இதில் 11 வரிகள் எங்கே என்று கேட்பவர்கள் கீழே பார்க்கவும்!

கவிதை வாசிப்பு முறை

மேலே சொன்னபடி படித்தால் இப்படி வரும்:

விதை புதைந்தாலும் மண்ணில்
சாகாமல் போராடி மீண்டும்
துளிர்விட்டு வெளிவந்து வளரும்!

விதை சாகாமல் துளிர்விட்டு வெளிவந்து
வெளிவந்து போராடி புதைந்தாலும் மண்ணில்
மண்ணில் மீண்டும் வளரும் வெளிவந்து
வெளிவந்து போராடி புதைந்தாலும் விதை!

விதை! சாகாமல் போராடி மீண்டும்
மீண்டும் வளரும் வெளிவந்து துளிர்விட்டு
துளிர்விட்டு சாகாமல் போராடி மீண்டும்
மீண்டும் மண்ணில் புதைந்தாலும் விதை!

பின்குறிப்பு:

முதல் பாகம் விதை(பெயர்ச்சொல்) எப்படி வளர்கிறது என்று சொல்கிறது. இரண்டாம் பாகம் விதை எப்படி வளர்ந்து மீண்டும் விதையாகிறது என்று சொல்கிறது. மூன்றாம் பாகம் விடாமுயற்சியைப் பற்றி சொல்கிறது (இங்கே ‘விதை’ வினைச்சொல்).