பொய்க்கால் குதிரை

Posted on பிப்ரவரி 20, 2011

23


முன்குறிப்பு:
கீழே உள்ள கவிதையில் ஒவ்வொரு வரியும் சிதைவுற்றது போல் தோன்றக்கூடும். என் புதிய முயற்சிக்காக அதை சகித்துக் கொள்ளவும்!

***இலவசமாக பெற்றேன் இன்பம் தரும் காட்சிகள் திரையில்…
***பெறவில்லை ஒளி தரும் மின்சாரம் ஆனால்…
***உயிர்போகும் தனித்தீவில் தேடோடி ‘வலையில்-விழா-மீன்களால்’…
***வீணாகப்போகும் நிறைவேறாமல் உண்ணாநிலைகள் நாடகமாய்…
***உன்னிடத்தில் ‘மூன்றாம்-தலைமுறை-அலைக்கற்றை’ பெறவிரும்பினேன்…
***கற்பனைச்சிறையில் மாட்டியது கனிமொழி போராட்டங்களால்…
***ஏமாற்றம் தந்துவிடுமோ ‘கூட்டணி-தாவல்கள்’ அஞ்சுகிறேன் நான்…
***விரல் மையிட்ட நாளில் முடிவான வாக்கு…
***உறக்கம் கெட்டது அன்றிலிருந்து உராய்வால்…

இப்பொழுது நீங்கள் ஒரு அரசியல் கவிதை படித்திருக்கக்கூடும். அதே கவிதையை மீண்டும் ஒருமுறை படிக்கவும். ஆனால், ஒவ்வொரு வரியையும் ‘திருப்பி’ப் படிக்கவும். அதாவது வலப்பக்கத்திலிருந்து இடப்பக்கம்(‘…’-யில் தொடங்கி ‘***’ வரை)!

ஒரு காதல் கவிதை படிக்கலாம்…..!