நீ என் இனமடா!

Posted on ஏப்ரல் 29, 2010

28


தொலைபேசியில் தன் மகனுடன் பேசிக்கொண்டிருந்த மகிழனின் முகம் சுளித்தது. தொலைபேசி இணைப்பை துண்டித்து விட்டு அமைதியாக அருகில் இருந்த நாற்காலியில் அமர்ந்தார்.

“என்னங்க ஆச்சு? அமுதன் என்ன சொன்னான்??” – மகிழனின் மனைவி காந்தள்
“அவன் அமெரிக்காவிலேயே கல்யாணம் பண்ணிட்டானாம்!”- எதையோ சிந்தித்த படியே மகிழன்
“என்னங்க சொல்றீங்க? நம்ம பையனா?” – அதிர்ச்சியுடன் காந்தள்
“ஆமா… அமெரிக்காவுக்கு படிக்க அனுப்புனா ஐயா கல்யாணம் பண்ணிட்டாரு!” – கோபத்தோடு
“யாரங்க கல்யாணம் பண்ணான்?”
“ஏன்… அவ ஜாதகத்த வாங்கி பொருத்தம் பாக்க போறியா?”
“சரி விடுங்க… அவன் தான் கல்யாணம் பண்ணிட்டான்… இனிமே என்ன பண்றது?”
“உன் மகன் அமெரிக்காவுல கல்யாணம் பண்ணிட்டான்னு ஊரெல்லாம் போஸ்டர்(சுவரொட்டி) அடிச்சு ஒட்டு!”
மகிழனின் கோபம் தணியவில்லை என்பதை உணர்ந்த காந்தள் அதற்கு மேல் பேசவில்லை.

பெரும்பாலான சிக்கல்களுக்கு தீர்வு தனிமையில் தான் கிடைக்கும். மகிழனின் சிந்தனை வெவ்வேறு திசைகளில் ஓடிக்கொண்டிருந்தது. காந்தளிடம் கோபமாக பேசியதை எண்ணி வருந்தவும் செய்தார்.

அன்றிரவு…

தூக்கம் வராது என்பதை தெரிந்தும் இருவரும் கட்டிலில் வந்து படுத்தனர்.

“பேசாம அவன டைவர்ஸ்(மண முறிவு) பண்ண சொல்லிரலாமா?” தளர்ந்த குரலுடன் காந்தள் சொன்னாள்.
“வேணாம். நமக்கு ஒரே பிள்ள அவன். அவன் ஆசைய நிறைவேத்தாம நம்ம என்ன சாதிக்க போறோம்?! ஊரு நாலு விதமா பேசும், போகட்டும்” என்றார் மகிழன் மாறிய மனதுடன்.
“என்னங்க? உண்மையாத்தான் சொல்லுறீங்களா?” நம்பமுடியாமல்.
“ஆமா. நல்லா யோசிச்சு தான் இந்த முடிவ எடுத்தேன். நீ என்ன சொல்ற?”
“எனக்கு ஓ.கே தாங்க.. ஆனா அவன் வெள்ளக்காரிய கட்டுனானோ?, கருப்பிய கட்டுனானோ?”
“ம்ம்ம்ம் யாருனாலும் பரவாயில்ல… அசைவம் சாப்டாலும் பரவாயில்ல… தமிழே தெரியாட்டியும் பரவாயில்ல… அவ தான் நம்ம வீட்டு மருமக!”
“அவன் எப்ப ஊருக்கு வர்றாங்க?”
“அடுத்த மாசம்… அவளையும் கூட்டிட்டு வர சொல்லிர்றேன்!”

நாட்களும் இரவுகளும் கடந்ததே தெரியவில்லை…. நாள்காட்டியில்(Calendar) இருந்து தாள் கிழிக்கப்படுகிறது… நாள் 01-05-2010…. அமுதன் இந்தியா வரும் நாள்!

ஒரு ஆண்டு பிரிவுக்கு பின் மகனை சந்திக்கும் ஆவலில் வளியூர்தி நிலையத்திற்கு(Airport) வெளியே நின்று கொண்டு நகர்படிகளை(Escalator) நோக்கிய படியே காத்துக்கொண்டிருந்தனர் மகிழனும்,காந்தளும்.

சிறிது நேரத்தில் அமுதனும், அவனுடன் படிக்கச் சென்ற அவன் நண்பன் இளமாறனும் அதில் வந்தனர்.

வழக்கமான நலமறிதல் உரையாடல் நடந்து முடிந்தது.

“டே அமுதா! என்ன டா கூட்டிட்டு வரலையா டா?!” ஏமாற்றம் கலந்த விழிகளுடன் மகிழன்
“யாரப்பா?” என்றான் அமுதன்
“அதான்… நீ… கல்யாணம் பண்ணியே… நான் தான் கூட்டிட்டு வரச் சொன்னேனே…”
“அதான் கூட்டிட்டு தானப்பா வந்திருக்கேன்!”
“என்ன டா சொல்ற? இங்க ஒன் கூட இளமாறன் மட்டும் தான டா இருக்கான்!”
“ம்ம்ம்… ஆமாப்பா… அவன தான் நான் கல்யாணம் பண்ணியிருக்கேன்!”

தூக்கிவாரி போட்டது மகிழனுக்கு.

Gay

அவனா நீ.....?

அப்படியே அமுதனை மட்டுமே பார்த்து பேசிக்கொண்டிருந்த மகிழனின் கண்கள் திரும்பி இளமாறனை பார்த்தது…அவன் பட்டு சேலை அணிந்து , பொட்டு வைத்து, பூ வைத்து நிற்பது போல மகிழனுக்கு தோன்றியது…

“என்னங்க… இங்க நின்னு பேசுனா அசிங்கமாயிரும்… நம்ம வீட்டுக்கு போய் பேசலாங்க..” என்றாள் காந்தள்

மகிழனின் வீட்டில்…

“என்ன டா சொல்ற? ஒரு ஆம்பிளைய கல்யாணம் பண்ணிட்டு வந்து நிக்குறையே வெக்கமா இல்ல??” – காந்தள்
“நான் கே(Gay) தான் மா… இதுல என்ன தப்பு இருக்கு?” – அமுதன்
“உனைய அமெரிக்காவுக்கு அனுப்புனேன்ல என்ன செருப்பால அடிக்கணும் டா” – மகிழன்
“சும்மா அமெரிக்கா… இந்தியான்னு… பொலம்பாதீங்க அங்கிள்(Uncle).. இப்ப தான் இந்தியாலையும் சட்டப்பூர்வமா ஓரினச்சேர்கையாளர்கள அனுமதிக்குறாங்கள்ள…” – இளமாறன்
“டேய்… நீ முன்னாடி அங்கிள்னு கூப்டப்ப எனக்கு எதுவும் தோனல டா…ஆனா இப்ப அசிங்கமா இருக்கு டா..” – மகிழன்
“ஏம்ப்பா… ரெண்டு பேச்சலர்ஸ்(Bachelors – மணமாகாதவர்கள்) ஒரே ரூம்ல(Room) தங்குனா யாரும் ஒன்னும் சொல்ல மாட்றீங்க.. ஆனா ரெண்டு பேரும் கல்யாணம் பண்ணா மட்டும் ஏன் இப்படி தடுக்குறீங்க?” – அமுதன்
“டே… நண்பர்களா இருக்குறது வேற… கணவர்களா இருக்குறது வேற டா…” – மகிழன்
“இப்பயும் அவன் எனக்கு நண்பன் தான் அங்கிள்.. அந்த நட்பு தான் எங்களுக்குள்ள காதல வளத்துச்சு…” – இளமாறன்
“டே… இதுக்கு வெளக்கம் வேறயா டா… வெளங்கிரும்…” – மகிழன்
“அங்கிள்… மனுசனும் மத்த மிருகங்கள போல ஒருத்தன் தான்.. நாய், பூனையெல்லாம் கேயா(Gay) இருக்கு, நாங்க இருக்க கூடாதா?” – இளமாறன்
“சரி… நீங்க கேயா இருக்குறது தப்பில்லனு வச்சுக்குருவோம்.. எனக்கு இருக்குறது ஒரே பையன், உங்க அப்பாவுக்கும் நீ ஒரே பையன்… இப்டி ரெண்டு பேரும் இருந்தீங்கன்னா நம்ம வம்சம் அழிஞ்சுராதா?” – மகிழன்
“ஒரு குழந்தைய தத்தெடுத்து வளப்போம் பா… தத்தேடுக்கரதுக்கு குழந்தையா இல்ல..” – அமுதன்
“எல்லாமே சரி டா… ஆனா செக்ஸ்(உடலுறவு) இல்லாம எந்த ஒரு வாழ்கையும் முழுமை அடையாது டா… அது ஒரு உண்மையான அன்பின் அடையாளம் டா.. அத இழந்துட்டு என்ன டா சாதிக்க போறீங்க?” – மகிழன்
“அத இழக்கப் போறோம்னு யாரு சொன்னா?? நாங்க ரெண்டு பேரும் XXXXXX XXXXXXX XXXXXXXX XXXXXX! நீங்க அதெல்லாம் பத்தி கவலப்படாதீங்கப்பா….” – அமுதன்

இதை கேட்டதும் மகிழன் அங்கேயே மயங்கி கீழே விழுந்து விட்டார்!

“என்னங்க… என்னங்க… எழுந்துறீங்க!” – என்ற காந்தளின் குரல் மட்டும் லேசாக மகிழனின் காதில் ஒலித்தது. தன் உடலை யாரோ குலுக்குவது போல தெரிந்தது அவருக்கு!

அவர் மெல்ல கண் விழித்தார். ஒன்றும் புரியாமல் சுற்றி சுற்றி பார்த்தார்.

“எங்க அந்த ரெண்டு பேரும்?!” – மகிழன்
“எந்த ரெண்டு பேரும்?” – காந்தள்
“அதான்… அமுதனும் இளமாறனும்…”
“ம்ம்ம்ம்…. இப்பவாவது ஞாபகத்துக்கு வந்ததே.. அவங்க ரெண்டு பேரும் நேத்து தான விசா இன்டர்வியுக்கு (VISA Interview) மும்பை போனாங்க…”
“என்ன சொல்ற?”
“உங்களுக்கு என்ன ஆச்சு? இன்னும் ஒரு மாசத்துல அவனும் இளமாறனும் அமெரிக்காவுக்கு போய் பெரிய யுனிவர்சிட்டில(பல்கலைகழகம்) படிக்க போறாங்க… உங்களோட கனவ நிறைவேத்த தான அவன் இவ்வளவு கஷ்டப்பட்டுட்டு இருக்கான்… நீங்க இப்படி பொறுப்பில்லாம தூங்கிட்டு இருக்கீங்களே?!!”

“என்னோட கனவ ஒன்னும் அவன் நிறைவேத்த வேணாம்…” என்று படபடத்தவர் தொடர்ந்தார்,” ஏன்… அமெரிக்கால போய் தான் படிக்கனுமா? இங்க இந்தியால படிக்க முடியாதா?”