தமிழோடு விளையாடுவோம் – 2

Posted on பிப்ரவரி 21, 2010

21


அர்ப்பணிப்புகள்:
இந்த இடுகையை இப்பொழுது நீங்கள் படிக்கிறீர்கள் என்றால் அதற்கு காரணமாய் விளங்குகின்ற என் அண்ணனின் பிறந்தநாளுக்கு (பிப் 21) இதை பிறந்தநாள் பரிசாக அர்ப்பணிக்கின்றேன்!

எழுத்து விளையாட்டு :

கீழே இருக்கும் “சீர்கள்” தமிழ் சொற்களின் கலைந்த நிலை.
அதனுள்ளே ஒளிந்திருக்கும் சொற்களை கண்டுபிடியுங்கள்!

* ய ணை ம் பி
* ணு ன் ய வி ன ல் மி
* வி ம் க த க் ர ற
* ப ம் ட் க ட
* வ ப ன் ல க
* ழ ச் சி சு கு ல் க்
* பு ப் ளி கு ற் யி வெ
* கை தி ந ங் ரு
* அ ணா றி மை ய வொ
* த று க ந் டு கு

மதிப்பீடு :

8 சொற்களுக்கு மேல் – வெற்றி!
5 – 8 சொற்கள் – நல்ல முயற்சி!
0 – 4 சொற்கள் – இன்னும் பயிற்சி வேண்டும்!

ஐந்தாம் படை:

மெய்யெழுத்தே(ஒற்றெழுத்து) இல்லாத ஐந்து எழுத்துக்கள் கொண்ட சொல் ஐந்தாவது கண்டுபிடிக்கவும்!

காட்டாக : அறிவுடைமை, எழுஞாயிறு, தகவலறை

* “யா”,”கை”,”தே” போன்றவைகளெல்லாம் ஒரு எழுத்தாக கணக்கிடப்பட வேண்டும்!! 😉
* பொருளையோ இடத்தையோ குறிக்கும் பெயர்ச்சொல்லைத் தவிர்க்கவும்!
* தூயத்தமிழ் சொற்களை பயன்படுத்தவும்(வழக்கம் போல!)!
காட்டாக : “சுயமரியாதை” என்றெல்லாம் பயன்படுத்தாதீர்கள்.


நூறாயிரம் சொற்களில் ஐந்து சொற்களா கிடைக்காது??!!

சொல்லாக்கு விளையாட்டு:

தொழில்நுட்பம் வளர வளர மொழியும் வளர வேண்டும்! இல்லையென்றால் அந்த மொழி அழிந்து விடும்!

நான் முந்தய இடுகைகளில் சில சொற்களை உருவாக்கி இருக்கிறேன். இருந்தாலும் அவை பெரிதாக இருப்பதால் பயன்படுத்த எளிதாக இல்லை. அதற்காக அவைகளை குறுக்கமாக மாற்றலாம் என்று டுவிட்டரில் ஒரு நண்பர்(@TBCD) ஆலோசனை கூறினார்.

காட்டாக:
Bluetooth – தொடர்பில்லா குருந்தொலைவு பிணையம் – தொகுபி

Avalanche effect – தொரூககு பெருதிரல் விளைவு – தொரூபெதி விளைவு

Pendrive – கணினி கோப்புகள் சமிப்பு கருவி – கணிசமி

Headset – ஒலியூட்டுக்கருவி – ஒலியூட்டு

இது போல நீங்கள் ஒரு 5 சொற்களாவது உருவாக்க முயற்சித்து பாருங்கள்! முயற்சித்ததை மறுமொழியாக இடுங்கள்!

நான் உருவாக்கியதில் ஏதும் மாற்றம் இருந்தாலும் தெரிவியுங்கள்! அல்லது பொதுவாக அனைவரும் பயன்படுத்தும் சொல்லில் பிழை இருப்பதாக உங்களுக்கு தோன்றினால் அதையும் மறுமொழியாக இடவும்!

காட்டாக:
“Fans” என்பதை “விசிறி”,”ரசிகன்” என்று குறிப்பிடுவதை விட “விரும்பிகள்” எனக் குறிப்பிடலாம்!
“Spam” என்பதை எரிதம்(எரிச்சலூட்டும் கடிதம்!) என்று குறிப்பிடுவதை விட “அழையாமடல்”/”வேண்டாமடல்” எனக் குறிப்பிடலாம்!


குறிப்பு:

என் தமிழார்வத்திற்கும், என் வளர்ச்சிக்கும், பல வகைகளில் ஊக்குவித்தது நீங்கள் தான் அண்ணா! இதை இங்கே சொல்வதில் நான் பெருமை அடைகிறேன்! 🙂

முந்தைய விளையாட்டுகள் :

தமிழோடு விளையாடுவோம் – 1

Advertisement