குரங்கு காய்ச்சலா??

Posted on ஓகஸ்ட் 20, 2009

3


 

இடம் : மதுரை    நேரம் : காலை 08:33:44  மணி     நாள் : 13/01/2112

பெறுனர் : +919008457479
டே! இப்ப எங்க இருக்க?
+919992113131 13/01/2112  08:33:54 கா

பெறுனர் : +919992113131
அலுவலகத்துக்கு போயிட்டு இருக்கேன் டா..
+919008457479 13/01/2112 08:34:12 கா

பெறுனர் : +919008457479
நம்ம மேனேஜர்(மேலாளர்) இறந்துட்டாராம்.. 😦
இப்ப தான் செய்தி வந்துச்சு..
+919992113131 13/01/2112 08:36:22 கா

பெறுனர் : +919992113131
அப்படியா? அவருக்கும் குரங்கு காய்ச்சலா?
+919008457479 13/01/2112 08:36:48 கா

பெறுனர் : +919008457479
என்னன்னு தெரியல டா.. விசாரிச்சிட்டு சொல்றேன் டா..
+919992113131 13/01/2112 08:37:01 கா

——————————————————————————————-

பெறுனர் : +919442881303
மேலாளர் எப்படி மேல போனாரு? 🙂
தெரு தீவிரவாதிகள் கொன்னுட்டாய்ங்கலா?
+919992113131 13/01/2112 08:39:01 கா

பெறுனர் : +919992113131
எப்படின்னு சரியா தெரியல..
ஆக்சிஜன் சிலிண்டர (உயிர்வளித்தாங்கி)
வீட்டுலயே வச்சுட்டு போய்ட்டாருன்னு நினைக்குறேன்..
+919442881303 13/01/2112 08:39:15 கா

பெறுனர் : +919442881303
ஆமா டா.. நிறைய தடவ UV protection dress
(புற ஊதா கதிர் காப்புடை) போட மறந்திடுவாறு..
உடம்பெல்லாம் புண்ணாயிரும்..
+919992113131 13/01/2112  08:39:28 கா

பெறுனர் : +919992113131
நான் தெளிவா கேட்டு சொல்றேன் டா..
+919442881303  13/01/2112  08:39:44 கா

————————————————————————————-

பெறுனர் : +919992113131
குப்பை மின் உற்பத்தி நிலையத்திற்கு நண்பரை
பார்க்க உள்ளே சென்ற போது ஏற்பட்ட  மின்கசிவு
தாக்கி இறந்துவிட்டாராம்.. 😦
+919442881303 13/03/2112 08:48:11 கா

பெறுனர் : +919442881303
குப்பையே குப்பையை தாக்கியதே!! 🙂
+919992113131 13/01/2112 08:49:01 கா

——————————————————————————————–

பெறுனர் : +919008457479
மின்கசிவுல இறந்துட்டாராம்.. ஒரு ஆள் குறைஞ்சனால
கொஞ்சம் காத்தும் இடமும் கிடைக்கும்.. 🙂
+919992113131 13/01/2112 08:50:00 கா
———————————————————————————————-

Advertisements