கருப்பு கட்டங்கள்

Posted on ஓகஸ்ட் 7, 2009

5


இந்தியாவில் எந்த குறையும் இல்லை. ஆனால் இந்தியர்களிடம் சிறிது உண்டு. அதை இங்கே பதிக்க விரும்புகிறேன்.
          மேலை நாடுகளில் பண்பாடு என்ற பெயரில் கீழ்தரமாக பல செயல்கள் செய்வார்கள். எடுத்துக்காட்டாக மது அருந்துதல் மற்றும் புகை பிடித்தல். தன்னை தானே அழிக்கும் ஒரு நாணமற்ற அறிவை கொண்டவன் மனிதன் மட்டுமே. புகை பிடிப்பவனுக்கு கல்லீரல் கருகிவிடுகிறது. மது அருந்துபவனுக்கு குடல் வெந்து மூளை குழம்பி ஒரு இழிவான இறப்பு ஏற்ப்படுகிறது. அதற்காக அனைத்து ‘குடிமக்களும்’ திருந்திவிட்டால் இதை நம்பி இருக்கும் தொழிலாளிகள் (எ.கா டாஸ்மாக் ஊழியர்கள்) வாழ்வு பாதிக்குமே என்று வாதம் செய்ய விரும்பினால் இப்பொழுதே இதை படிப்பதை நிறுத்தி விடுங்கள்.

        நம் முன்னோர்கள் நமக்கு  பெற்று தந்த விடுதலை எப்படி சென்று கொண்டு இருக்கிறது? ஓரினசேர்க்கை செய்வது தவறாக கருதக்கூடாது என்று இந்திய தலைமை நடுவர் மன்றத்தில் மனு அனுப்பப்படுகிறது. ஏன் கடினப்பட்டு மனுக்கள் அனுப்புகிறீர்கள்?  பெண் குழந்தைகள் கொல்லப்படுவது நீடித்தால் தானாகவே அந்த நிலைமை தானே ஏற்ப்படும்.

           பொதுவாக இருசக்கர வாகனத்தில் செல்பவர்கள் உரிமமும்(license) தலைக்கவசமும்(helmet) எடுத்துச் செல்ல வேண்டும். ஆனால் நம் நாட்டில் அது இல்லாவிட்டாலும் பரவாயில்லை. பையில் பணம் நிறைந்திருக்க வேண்டும். ஏன் என்பது எல்லோருக்குமே தெரியும். அதைப்பற்றி பல பேர் பல முறை கூறி உங்கள் காதுகளுக்கே அலுத்துப்போயிருக்கும். அதனால் அடுத்த கட்டத்திற்கு போவோம்.

கையூட்டு

கையூட்டு

     இந்தியாவில் 10 பேர் இருக்க வேண்டிய ஒரு இடத்தில் 100 பேர் இருக்கிறார்கள், 100 பேர் இருக்க வேண்டிய இடத்தில் 10 பேர் இருக்கிறார்கள். நிலத்தில் மீனும் நீரில் எறும்பும் வாழ முடியாது. இதை அறியாமல் கிராமத்திலிருந்து(சிற்றூர்) நகரங்களுக்கு வரும் மக்கள் வீணாய் போகிறார்கள். எல்லா தொழில்களும் முன்னேற வேண்டும். எல்லா தொழில்களும் சம மரியாதை பெற வேண்டும். அதற்கு வருமானத்தில் முடிந்த அளவிற்கு பெரிய வேறுபாடுகள் இல்லாமல் அமைய வேண்டும். இல்லை என்றால் சாதி வேறுபாடு, இன வேறுபாடு, மொழி வேறுபாடு என்ற வரிசையில் வருமான வேறுபாடும் தலை வலியை உண்டாக்கி விடும்.

     நமது நாட்டில் நடிகர்களுக்கு வைக்க படும் பிறந்த நாள் விளம்பர பலகை, அரசியல்வாதிகளுக்கு வைக்கப்படும் விளம்பரப்பலகை மட்டுமே ஆயிரம் பேரின் வருமானத்திற்கு ஈடாகும்.
                                    இப்பொழுதுள்ள மிகப்பெரிய தொழில் ‘கல்வி’. உண்மையிலே  அப்படி  தான்  நடந்து கொண்டிருக்கிறது. கல்வியில் எந்த மாற்றமும் இல்லை. அப்புறம் எப்படி நம் உயர்வில் மட்டும் மாற்றம் ஏற்ப்படும்?

      வேற்றுமையில் ஒற்றுமை என்பது தான் இந்தியாவின் கொள்கை. சிரிக்காதீர்கள்.. அப்படி தான் கூறப்படுகிறது. அனால் பக்கத்து மாநிலங்களுக்கே தண்ணீர் அனுப்பாமல் அணைப்போட்டு தடுக்கிறார்கள். உண்மையில் பாகிஸ்தானில் இருந்து புறப்பட்டு வரும் இந்துஸ் நதி அணை எதுவும் போட்டுத் தடுக்காமல் குஜராத் மாநிலத்திற்குள் நுழைவது பலருக்கு தெரியாது.

     இன்னும் சட்டங்களை மதிக்காமல் நடப்பது, காடுகளை அழிப்பது, விலங்குகளை வேட்டையாடுவது, மூட நம்பிக்கை என்று பல உள்ளன. எல்லா வற்றையும் விரிவாக எழுத நேரமும் இடமும் போதவில்லை. நானும் மாறி மற்ற இந்தியர்களும் மாறி இந்தியா உண்மையிலே மிளிர வேண்டும் என்ற நல்ல எண்ணத்தோடு விடை பெறுகிறேன்.