அந்தாதி விளையாட்டு :
இதில் நீங்கள் ஈரெழுத்துச் சொற்களை மட்டும் பயன்படுத்த வேண்டும். அந்த சொல் முடியும் எழுத்தில் இன்னொரு சொல் தொடங்கி அடுக்காக போகவும்.
(எடுத்துக்காட்டு) சேமி–மிக–கவி–விதி–திகை–கைதி–திசு–சுவை
விதிமுறைகள்:
*ஒரு முறை பயன்படுத்திய சொல்லை மீண்டும் பயன்படுத்தக் கூடாது.
*சுட்டும் பெயர்ச்சொல்லை பயன்படுத்தக் கூடாது.
(எ.கா) மைனா,காசி,தோசை
*பேச்சுவழக்கு சொல்லையும், வட்டாரச் சொல்லையும் தவிர்க்கவும்.
(எ.கா) தல,மாமு,மிசா
*சுருக்கச் சொல்லை பயன்படுத்தக் கூடாது.
(எ.கா) கி.பி,கி.மு,எ.கா
மதிப்பெண்கள் :
7 சொற்களுக்கு மேல் : சொல் வித்தகன்!!!
5-7 சொற்கள் : நல்ல முயற்சி!!
0-4 சொற்கள் : வேற விளையாட்டை விளையாடவும்!
‘ஒன்றுக்குள் மூன்று‘ புதிர்:
தமிழிலுள்ள பொருள் தரும் மூன்ரெழுத்துச் சொல். அதில் எந்த ஒரு எழுத்தை நீக்கினாலும் மீதி இருக்கும் இரண்டு எழுத்துக்களும் வரிசை எதுவும் மாற்றாமலே பொருள் தரும் சொல்லாக அமையும். அது என்ன சொல்?
(எ.கா) ‘பசுமை‘ என்ற சொல்லில் ‘ப‘ எடுத்தால் ‘சுமை‘, ‘மை‘ எடுத்தால் ‘பசு‘ என்று பொருள் தருகிறது. ஆனால் ‘சு‘ எடுத்தால் ‘பமை‘ பொருள் தரவில்லை. ஆனால் அதுவும் பொருள் தர வேண்டும்.
சுந்தர்
ஜூலை 28, 2009
மொழிக்கு (சொல்லுக்கு) முதலில் வரும் எழுத்துக்கள்:
* உயிர் எழுத்துக்கள் 12
* {க, த, ந, ப, ம} * {உயிர் 12}
* {ச} * {உயிர்12 – அ,ஐ,ஔ}
* {வ} * {உயிர்12 – உ,ஊ,ஒ,ஓ}
* {ஞ} * {ஆ,எ,ஒ}
* {ய} * {உயிர்12 – ஆ}
மொழிக்கு இறுதியில் வரக்கூடிய எழுத்துக்கள்:
* {உயிர்12 – ஔ}
* ஞ * {உயிர்12 – எ, ஏ, ஓ}
* நொ
* வ * {உயிர்12 – எ, உ, ஊ}
* சு (ஈரெழுத்துச் சொற்களில்)
* {ஞ், ண், ம், ன், ய், ர், ல், வ், ழ், ள்}
இவை தவிர்த்து எஞ்சிய உயிர்மெய்களில் எகாரம் தவிர்த்து வரும்.
முதலிலும் கடையிலும் வரத்தக்கவை:
* {உயிர்12 – ஔ} (11)
* {க, த, ப, ம} * {உயிர் 12 – எ} + {நொ} (45)
* {ச} * {உயிர்12 – அ,எ,ஐ,ஔ} (8)
* {வ} * {உயிர்12 – எ,உ,ஊ,ஒ,ஓ} (7)
* {ஞா} (1)
* {ய} * {உயிர்12 – ஆ,எ} (10)
ஆக, 82C2 தெரிவுகள் வரலாம். இத்தனையையும் வெளியிடும் ஒரு நிரல் (program/script) எழுதித் தேர்ந்து பார்க்கலாம். சரியா?
LikeLike
Balaraman
ஜூலை 28, 2009
good information.. thank you.. i am ready to post these kind of interesting ‘tamil’ games.. By the way, Have you tried ‘ondrukkul moondru puthir’?
LikeLike
சுந்தர்
ஜூலை 28, 2009
இன்னும் இல்லை. ஆனா இதுக்கும் இந்த ஈரெழுத்துச் சொற்பட்டியல் தேவைதானே.
LikeLike
சுந்தர்
ஜூலை 28, 2009
முந்தைய நெறிமுறைகள் தொல்காப்பியத்தில் உள்ளவை. தமிழில் வழங்கி வரும் வடமொழிச் சொற்கள் இதற்கு அலங்கடைகள் (விதிவிலக்குகள்).
LikeLike
சுந்தர்
ஜூலை 28, 2009
82C2 என்பது 82P2 என்றிருக்க வேண்டும். தவிர அந்தாதித் தொடரின் முதலில் வரும் சொல்லின் முதலெழுத்துக்கும் கடைசிச்சொல்லின் கடையெழுத்துக்கும் கட்டு குறைவு.
LikeLike
சுந்தர்
ஜூலை 28, 2009
மேலே நான் தந்த விதிகளில் சில தவறுகள் உள்ளதுபோல் தோன்றுகிறது. காட்டாக, சொல்லின் முதலில் ‘யா’ மட்டும் வருமென நினைக்கிறேன், தவறாக ‘யா’வைத் தவிர மற்ற யகர உயிர்மெய்கள் வருமென எழுதி விட்டேன். நல்ல தொல்காப்பிய உரைநூல் தேவை.
LikeLike
சுந்தர்
ஜூலை 29, 2009
ஒன்றுக்குள் மூன்று போட்டிக்கு:
1.கதிரை – http://dsal.uchicago.edu/cgi-bin/philologic/search3advanced?dbname=tamillex&query=கதிரை&matchtype=exact&display=utf8
கரை, திரை, கதி (http://dsal.uchicago.edu/cgi-bin/philologic/search3advanced?dbname=tamillex&query=கதி&matchtype=exact&display=utf8)
2.கவிதை (தமிழென்று கொண்டால்)
கதை, விதை, கவி
3. மிகுகை
மிகை,குகை,மிகு
LikeLike
Raja Ashok
ஓகஸ்ட் 25, 2009
ஒன்றுக்குள் இரண்டு
தீமை
தீ, மை
this much i can do with my knowledge… finding 3 word in a word is not possible with my small knowledge…
LikeLike
BHARATHIRAJA
நவம்பர் 19, 2009
ஒன்றுக்குள் மூன்று போட்டிக்கு:
“குதிரை”
குதி ,திரை and குரை
how is this..?
LikeLike
balaraman
நவம்பர் 19, 2009
குதிரையை தமிழ் என்று எடுத்துக்கொண்டால் இதுவும் நல்ல பதிலே!!! குதிரையை தமிழில் “பரி” என்று அழைப்பார்கள்..
LikeLike
rajeswari
திசெம்பர் 30, 2009
“Thamizha..Thamizha ..” enna un muraichi solla varthaigal illai..vazhthukkal..
LikeLike
balaraman
திசெம்பர் 30, 2009
நன்றி…
LikeLike
sutha
மார்ச் 9, 2010
அந்தாதி விளையாட்டு :
காசு – சுவை – வைகை – கைதி – திரி – ரிஷி
LikeLike
balaraman
மார்ச் 10, 2010
நல்ல முயற்சி தான்… இருப்பினும்…
//*சுட்டும் பெயர்ச்சொல்லை பயன்படுத்தக் கூடாது.//
எனவே “வைகை” எழுத கூடாது!
ரிஷி – தமிழ் சொல் இல்லை !
LikeLike
sutha
மார்ச் 9, 2010
‘ஒன்றுக்குள் மூன்று‘ புதிர்:
ஆதியாகமம் :- ஆதி, யாகம், கமம்
கவிதை:- கவிதை, கவி, விதை, தை
தொல்காப்பியம்:- தொல்காப்பியம், தொல்,காப்பியம்
மணிமேகலை:-மணிமேகலை, மணி,மேகலை,கலை
வளையாபதி:- வளையாபதி.வளை,பதி
LikeLike
balaraman
மார்ச் 10, 2010
நீங்கள் ஆர்வத்துடன் தமிழோடு விளையாடுவதை பாராட்டுகிறேன்!
ஆனால் விளையாட்டின் விதிகளை நன்றாக புரிந்து கொள்ளுங்கள்!! 🙂
உங்கள் விடைகளில் நான் “கவிதை” மட்டும் ஏற்றுக்கொள்கிறேன்!
அதற்கு காரணம் – கவிதை —> கவி – விதை – கதை
LikeLike
sutha
மார்ச் 10, 2010
நன்றி…
LikeLike
கௌதம்
ஏப்ரல் 18, 2011
மதுரை – மது, துரை, மரை
மது, துரு, ருசி, சிகை, கைதி, திதி, திசை, சைகை,
LikeLike
balaraman
ஏப்ரல் 18, 2011
நல்ல முயற்சி. தூய தமிழ்ச் சொற்கள் கொடுத்தால் இன்னும் நன்றாக இருக்கும்.
LikeLike
Srini
மே 12, 2011
Podhikai
LikeLike
SankaranNsk
மார்ச் 26, 2017
நற்பதிவு.சிறப்பான விளக்கம்
LikeLike
சங்கிலிதுரை
ஒக்ரோபர் 9, 2018
பாகு-குவி-விதி-திசை-சைகை-கைது-துணி
LikeLike