தொல்லைக்காட்சியும் சங்குச்சந்தையும்

Posted on ஜூன் 15, 2009

12


தொடக்கமும் தெரியாது முடிவும் கிடையாது என்றும்
ஓயாது குறையும் பொங்கும் சமயங்களில் நம்மை
உள்ளே இழுத்துவிடும் வளம் கொழிக்கும் தமிழ்நாட்டில்
கடலலைகளும் பங்குச்சந்தை நிலவரமும் தொலைக்காட்சி
நெடுந்தொடர்களும் ஒன்றே

—————–

இந்தப் புதுச் சிலேடையைப்(!) படித்தவுடன் நண்பர் கண்ணபிரான் ரவிசங்கர் இந்த ‘வெண்பாமை*’ இயற்றினார்:

தொடக்கமும் காணா தொலைமுடிவும் காணா
அடக்கமும் இன்றியே பொங்குமே – நடுக்கமாய்ப்
பங்கிடும் சந்தையும், பாழ்தொலைக் காட்சியும்
முங்கிடும் கடலே காண்!

—————————

இந்தப் பாடலின் கருத்துக்கு ‘வெண்பா’ வடிவம் கொடுத்தார் இலவசக்கொத்தனார். நன்றி.

என்றுமே ஈர்த்திடும் ஏறி இறங்கிடும்
தன்னை மறந்தே தடுமாறப் பண்ணிடும்
பொங்கும் கடலும் புரியாத பங்குமா
அன்புடை நெஞ்சே யது

*வெண்பாம் – ஆங்காங்கே சிறிது தளை தட்டக்கூடிய வெண்பா!