நண்பன்

Posted on ஜூன் 13, 2009

3


மதியழகன் ரயில் நிலையத்தில் உள்ள சாய்விருக்கயில் தனியாக அமர்ந்து கொண்டிருக்கிறான். அவனை சுற்றி அவனை விட எடை அதிகம் உள்ள பைகளும், பொருட்களும், ஒரு மடிக்கணினியும் (laptop) சூழ்ந்திருந்தது. அதை விட அதிக கனம் அவன் மனதில் இருந்தது. வெளிநாட்டில் படித்துக் கொண்டிருக்கும் அவன் மாத விடுமுறைக்கு சொந்த ஊருக்கு வந்திருக்கிறான். விடுமுறைக்காலம் முடியும் நேரம் இது. உறவினர்கள் வீடுகளுக்கெல்லாம் சென்று ஒரு வேளை உணவு உண்டு திரும்பியாயிற்று. இனி ஒரு வருட காலம் வெளிநாட்டில் படிப்பை தொடர வேண்டும். என்ன செய்வது? வேண்டியவர்களின் அன்பை குறுந்தகடுகளிலும் (CD), கணினி கோப்புகள் சமிப்பு கருவிகளிலும்(USB pendrive) தான் சுமந்து செல்ல வேண்டும், புகைப்படங்களாக(photos)!! இந்த நேரத்தில் மதியழனின் கைப்பேசியில்(cell phone) ஒலி அடிக்கிறது. எடுத்து பார்த்தான்.

பிரிவு!!

பிரிவு!!

அதில் “வெற்றி மாறன்” என்ற பெயர் வந்தது. மதி மனதில் மகிழ்ச்சி பொங்குகிறது. வெற்றி மாறனும், மதியழகனும் பொறியியல் கல்லூரியில் ஒன்றாக படித்தவர்கள். வெற்றி ஒரு பெரிய கணினி நிருவனத்தில் வேலை செய்கிறான். மதி தனது மேற்படிப்பை வெளிநாட்டில் தொடருகிறான்.மதிக்கு ஒரு சிறிய குற்ற உணர்ச்சி… வெளிநாட்டில் இருந்து திரும்பி 20 நாட்கள் ஆகியும் நண்பனிடம் பேசவில்லையே என்று… கல்லூரியில் படிக்கும் பொழுது இவர்களுக்குள் எந்த வேறுபாடுகளும் இல்லை… எடுத்துக்காட்டாக மொழி வேறுபாடு, இன வேறுபாடு, கட்சி வேறுபாடு குறிப்பாக தகுதி வேறுபாடு… ஆனால், இப்பொழுது “தகுதி வேறுபாடு இருக்கிறதா? இல்லையா?” என்று தெரியவில்லை… அவ்வளவு தான்…

வெற்றி மாறனின் கைபேசி தொடர்பை அனுமதித்தான் மதி… “டேய்! என்னடா ஊருக்கு வந்த பிறகு ஏன்ட சொல்லவே இல்ல!” என்று அதட்டியது வெற்றியின் குரல்… “இல்லடா… நீ கம்பனியில பிஸியா(ஓய்வில்லாமல்) இருப்ப… எதுக்கு உனய டிஸ்டர்ப் பண்ணிட்டுனு விட்டுட்டேன் டா..” என்று சமாளித்தது மதியின் குரல்..

பேச்சு வேறு திசையில் தொடர்ந்தது. “நான் எங்கடா பிஸியா இருக்கேன்… இங்க ப்ராஜெக்டே(திட்டப்பணி) இல்ல… எப்ப வேலைய விட்டு அனுப்பப் போராய்ங்கன்னே தெரியல…” என்றான் வெற்றி. “டேய்! நீ ஏன்டா கவல படுற?… நீ தான் உங்க சீனியர் மேனெஜர்ட்ட(முதுநிலை மேலாளர்) இருந்து நிறையா ரெக்கக்னிசன் (அரிந்தேற்றல்) வாங்கியிருக்கேல… எக்ஸலென்ட் பெர்ஃபார்மன்ஸ் ஆஃப் தி இயர் லாம் (ஆண்டின் மேன்மையான செயல்திறன் கொண்டவன்) வாங்கியிருக்கேல..” என்றான் மதி.”உனக்கென்னடா தெரியும் இங்க என்ன நடக்குதுன்னு..ன் நீ அமெரிக்கா போய் படிக்கிற.. நீங்கள்ளாம் பெரிய ஆளு.. ரிஸெஸன் பீரியர்ட்ல (தொழில் பின்னடைவு காலம்) ஹையர் ஸ்டடிஸ் தான் டா நல்லது.”என்றான் வெற்றி. அத்தொடு இல்லாமல் மீண்டும் தொடர்ந்தான்,”என்னடா அங்க போய் வேற கலக்குறயாமே!! ரெண்டு செமெஸ்டர்லையும்(கல்லூரி கல்வியாண்டின் பருவம்) ஃபோர் அவுட் ஆஃப் ஃபோர் கிரேடு (தேர்வு தரம்) வாங்கியிருக்கயாம்.. எப்ப ட்ரீட்(விருந்து) போகலாம் சொல்லு..”

மதி, சற்று தளர்ந்த குரலுடன்,”இல்லடா.. இன்னும் ஒரு வாரம் தான் இருக்கு.. வந்ததுல இருந்து அப்பா அம்மா கூடவே இல்ல.. அது போக கொஞ்சம் ஷாப்பிங்(பொருள் வாங்கல்) பண்ணனும்… டைமே இல்லடா..” என்றான். வெற்றி, அவன் கூறுவதை பெரிது படுத்தாமல்,” சரி விடு! ஆர்குட்ல (ஒரு நண்பர்களுக்கான கணிப்பொறிவழி பிணையம்) உன் ஃபோட்டோ பாத்தேன்.. மெளிஞ்சுட்ட..” அதற்கு மதி, “ஆனா இங்க ஊருக்கு வந்ததுக்கு அப்பறம் நாலு அஞ்சு கிலோ கூடிருச்சு டா..” என்று சிரித்தான்.

மதி,”டேய்! ட்ரெயின் வந்துருச்சு டா.. ஊருக்கு போயிட்டு ஃபோன் பன்றேன்.. அப்புறமா நம்ம ஸ்கைப்ல (ஒரு கணினியின் செயலி) வீடியோ சேட் (கணினி திரைவழி அரட்டை) பண்ணலாம்… அப்பப்ப மெயில் (மின்னஞ்சல்) அனுப்பு டா… பை டா..” என்றான்.

வெற்றியும், “பை டா..” என்று கூறி நண்பனுக்கு விடை கொடுத்தான்.