முதல் காதல்:
அவனுக்கும் அவன் மனைவிக்கும் எடுத்தப் பயணச்சீட்டுக்கு மீதம் கொடுத்த உருவாத்தாள்களில்(rupees), பத்து வருடங்களுக்கு முன் அவன் பெயரையும், அவன் முதல் காதலி பெயரையும் எழுதிப் பார்த்த ஒரு பத்து உருவாத்தாளும் இருந்தது!
‘இறந்த’ காலம்:
நேரத்தில் பின்னோக்கி பயணித்த அந்த விஞ்ஞானி, முதலில் தன் தாயின் கருவிலிருந்து தன்னை அழித்தார்.
நட்பு:
ஓட்டப்பந்தையத்தில் முதலாவதாக ஓடிவந்துக்கொண்டிருந்த நான் தடுக்கி விழுந்த பொழுது, என்னைத் தாண்டிச் சென்ற சிலரில் ஒருவன் மட்டும் நின்று, என்னைத் தூக்கிவிட்டான் – என் நண்பன்.
நில்… ‘கவனி’… செல்…:
ஊழலுக்கு எதிரான போராட்டத்தில் கலந்து கொள்வதற்கு வந்த அவன், இடையில் மடக்கிப் பிடித்த போக்குவரத்து காவல்துறையினருக்கு நூறு உரூபாய் கையூட்டு கொடுத்துவிட்டு தான் சென்றான்.
ஏமாற்றாதே! ஏமாறாதே!:
இரண்டு உருவா(rupee) மீதம் சில்லறை வாங்காமல் அந்த நபர் கீழே இறங்கியதால் நடத்துனர் மகிழ்ந்துக் கொண்டிருந்த அதே வேளையில், செல்லாத பத்து உருவாத்தாளை நடத்துனரிடம் கொடுத்துவிட்டு தப்பித்த மகிழ்ச்சியில் அந்த நபர் இருந்தார்!
தாய்மை:
“அம்மா… பசிக்கிதும்மா!” என்று கேட்டச் சிறுவனுக்கு தனக்காக வைத்திருந்த ஒரே ஒரு தோசையையும் முகத்தைச் சுளிக்காமல் எடுத்து ஊட்டினாள் அந்த அம்மா.
அவர்கள்:
கோவிலில் ஆண்களுக்கென்றும், பெண்களுக்கென்றும் தனித்தனியாக வரிசைகள் இருந்த போதிலும், எங்கு செல்வது என்று தெரியாமல் நின்றுக் கொண்டிருந்தாள் அந்த திருநங்கை.
கொலைஞன்:
அந்தக் கொலை வழக்கை உசாவிய ஆய்ஞன் நீண்ட நாட்களுக்குப் பிறகு தான் கண்டறிந்தான், தானே தான் அந்த கொலையாளி என்று!








ravishankar (@udanpirappe)
செப்டம்பர் 8, 2011
ellaaame alagu !
balaraman
செப்டம்பர் 8, 2011
நன்றி
desinghrajan
செப்டம்பர் 8, 2011
நகைச்சுவை , சிந்தனை , ஆக்கப்பூர்வமான துணுக்குகள் ..படித்த பிறகு இன்னும் இல்லையே என்ற ஏக்கத்துடன் மறுமொழி இடுகிறேன் .
-என்றும் நினைவுடன்
தேசிங்
balaraman
செப்டம்பர் 8, 2011
“நான் எழுதுனது பத்தலைன்னு சொல்றியா? அல்லது நான் எழுதுனது நல்லாயில்லைன்னு சொல்றியா?”ன்னு எனக்கு சரியா புரியல. இருந்தாலும் நன்றி.
desinghrajan
செப்டம்பர் 8, 2011
ஹிஹி . புலவருகே புரியவில்லையா?
நீங்க இன்னும் சில குறுங்கதைகள் சேர்த்திருக்கலாம் என்று அர்த்தம்.
பொதுவாகவே ஒருவரின் படைப்புகளை நல்லா இல்லை என்று யாரும் சொல்வதில்லை, நானும் அப்புடித்தாங்க !
பிடித்தது – நில் கவனி செல்
சுந்தர்
செப்டம்பர் 8, 2011
உருவாத்தாள் அல்லது உருபாத்தாள் எனலாம். ரூ நெடில் இங்கு குறுகும்.
balaraman
செப்டம்பர் 8, 2011
திருத்திவிட்டேன், நன்றி.
Janakiraman
செப்டம்பர் 8, 2011
தாய்மை: – Endrum Maarathathu..
நில்… ‘கவனி’… செல்…: – Unmaiyo Unmai..
நட்பு: – Athellam Oru Kaalam..
உசாவிய ஆய்ஞன் ?????
Oru vari kadhaiyaanaalum arthangalum, unmaigalum pala..Keep rocking..
balaraman
செப்டம்பர் 8, 2011
நன்றி அண்ணா!
உசாவுதல் – விசாரித்தல்
ஆய்ஞன் – இங்கே investigator!
Jeeva S
செப்டம்பர் 8, 2011
Sema da.. super awesome…better than all your previous blogs
try to create a small book with all the stories in your blog…Its seriously good..
balaraman
செப்டம்பர் 8, 2011
நன்றி டா. எனக்கும் என் கதைகளைத் தொகுத்து ஒரு நூல் வெளியிடும் எண்ணம் இருக்கிறது. முயற்சிக்கிறேன்.
சுந்தர்
செப்டம்பர் 8, 2011
கட்டாயம் வெளியிடலாம். இப்போது பல வழிகள் உள்ளன. வகைவகையாய் இருப்பதால் நல்லா வரும்.
திருத்தம்: முயற்சிக்கிறேன் என்பது இயல்பல்ல, முயலுவேன் என்பதே.
balaraman
செப்டம்பர் 9, 2011
ஓ! சரி, இனிமேல் இந்த தவறைச் செய்ய மாட்டேன்!
Rajan
செப்டம்பர் 8, 2011
good work.
balaraman
செப்டம்பர் 8, 2011
நன்றி.
வி.பாலகுமார்
செப்டம்பர் 8, 2011
நல்லா இருக்கு.
balaraman
செப்டம்பர் 8, 2011
நன்றிங்க…
அ.சேர்ம ராஜா
செப்டம்பர் 8, 2011
அருமை..
balaraman
செப்டம்பர் 8, 2011
நன்றிங்க!
vignesh
செப்டம்பர் 8, 2011
yellame super da:) kadhala ‘mudhal kadhal’ nu sonnathu kadhaliya ‘mudhal kadhali’ nu yeluthunathu super:) natpu superrrrrrrrrrrrrrrrrrrrr:)
balaraman
செப்டம்பர் 8, 2011
நன்றி நண்பா!
Karthick
செப்டம்பர் 8, 2011
Ellamae nalla irukku…aanaa itha maathiri neraya padichathunaala oru dejavu maathiri thonuthu. Good work anyways.
balaraman
செப்டம்பர் 9, 2011
உண்மை தான்! எல்லாமே பேசுபுக்கில் போடப்படும் க(வி)தைகள் போல இருக்கிறது!!
Rajesh Narayanan
செப்டம்பர் 8, 2011
bala it’s too good.
balaraman
செப்டம்பர் 9, 2011
நன்றிங்க!
rajeshjothi
செப்டம்பர் 9, 2011
நான் மிகவும் ரசித்தது…
//நேரத்தில் பின்னோக்கி பயணித்த அந்த விஞ்ஞானி, முதலில் தன் தாயின் கருவிலிருந்து தன்னை அழித்தார்.//
அனைத்து கதைகளும் சிறப்பாக இருந்தது.பாராட்டத்தக்க முயற்சி.
balaraman
செப்டம்பர் 13, 2011
நன்றி தோழா!
Ramesh
செப்டம்பர் 10, 2011
I’m Sathish kumar’s friend. Ramesh from Melakkal.
balaraman
செப்டம்பர் 10, 2011
ஓ! சரி நண்பரே. வருகைக்கு நன்றி.
Buvana
செப்டம்பர் 12, 2011
All stories are gud!!!
balaraman
செப்டம்பர் 13, 2011
நன்றி தோழி!
சரவணன்
செப்டம்பர் 13, 2011
ஏமாற்றாதே! ஏமாறாதே!:
எனக்கு இன்னும் சிரிப்பு வருதுண்ணா!
Nice work!
balaraman
செப்டம்பர் 13, 2011
எனக்கும் எழுதும்போதே அந்தக் கதை மிகவும் பிடித்திருந்தது! நன்றி டா!
பாலா
செப்டம்பர் 14, 2011
நல்ல முயற்சி தோழர்! ஒவ்வொன்றும் ஒரு விதம்
இது நான் ட்விட்டரில் முயற்சி செய்தது
தொந்தரவு செய்துகொண்டே இருந்தான்,உறக்கமிழந்தேன், நிம்மதியிழந்தேன்.தனிமையில் அகப்பட்டான் ரத்தம் சுவற்றில் தெறிக்க கொலைசெய்தேன்#மூட்டைபூச்சி
balaraman
செப்டம்பர் 15, 2011
நன்றிங்க! உங்களோட குறுங்கதையும் அருமையா இருக்கு! இத வரிக்கு கீழ வரியா அடுக்கி எழுதியிருந்தீங்கன்னா ‘ஹைக்கூ’ என்று கூட சொல்லலாம்!
Christy
அக்டோபர் 11, 2011
hi balaraman… kalakura po… all the stories are too good… especially the “Irantha kalam”… i liked it so much… super…
balaraman
அக்டோபர் 11, 2011
நன்றி!
cpsenthilkumar
அக்டோபர் 16, 2011
இறந்த காலம் தான் டாப்.. ஆனால் அதுல லாஜிக் எரர் இருக்கு, ஆனாலும் ரசிக்கலாம்.. கலக்குங்க
balaraman
அக்டோபர் 16, 2011
நன்றிங்க. அறிவியல் புனைவு என்று எடுத்துக் கொண்டால், ஏரணங்கள் நிறைய பார்க்காவிட்டால் நன்றாக இருக்கும்.
கந்தசுவாமி
நவம்பர் 17, 2011
என் மனம் கவர்ந்த எழுத்தாளர்கள் பட்டியல்,
ஒரு படி நீளுகிறது..
உங்கள் பெயர் சேருகிறது.
இந்தத் தம்பியின் இதயம் கனிந்த வாழ்த்துகள்.
என் வலைதளத்தை நீங்கள் ஒருமுறை வாசிக்க வேண்டுகிறேன்.
என் அறியா தவறுகள் தங்களால் திருத்தப்படும் என்பதால்.
…கந்தசுவாமி……..
balaraman
நவம்பர் 17, 2011
நன்றி. இதைக் கேட்கும் பொழுது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. உங்களின் வலைத்தளத்தை வாசித்து கருத்து சொல்கிறேன்.
Kokilah Kanniappan
December 21, 2011
மிகவும் சிறப்பாக கதைகள். படிக்க படிக்க இனிக்கும் அழகிய தமிழை அதன் தன்மை இழக்காமல் உங்கள் வலைப்பகுதியில் படித்தேன். நன்றி. நன்றி.நன்றி.
balaraman
December 22, 2011
நன்றிங்க. தமிழின் தூய்மையைக் காத்தாலே போதும். தமிழ் இனிக்கும்.