பார்வையாளர்களுக்கு
நான் இந்த வலைப்பதிவு மூலம் தமிழார்வத்தை அனைவருக்கும் பரப்ப எண்ணுகிறேன். அது போக சமுதாயத்திற்கு/குடியினருக்கு தேவையான சில கருத்துக்களையும் கூறும் வகையில் படைப்புகளை உருவாக்குகின்றேன்.
நான் என்னால் முடிந்தவரை நல்ல தூய தமிழை பயன்படுத்த விரும்புகிறேன். ஆனால், என்னை மீறி சில தவறுகள் ஏற்படலாம். தட்டச்சுப் பிழைகளும் ஒற்றுப்பிழைகளும் எழுத்துப்பிழைகளும் இருக்கலாம். நான் திருத்தமுற கருத்துக்களை தூய தமிழ்ச் சொற்களில் பிழையில்லாமல் எழுத முயல்கிறேன்.
எல்லா மொழிகளிலும் பேச்சு வழக்கு, எழுத்து வழக்கு என்று இருக்கும். எழுதும் பொழுது எழுத்து வழக்கு பயன்படுத்துவதே நல்லது. இல்லையென்றால், அந்த மொழி அப்படியே அழிந்து விடும். எனவே, என்னுடைய இடுகைகள் எழுத்து வழக்கிலேயே அமைத்துள்ளேன். கதைகளில் வரும் உரையாடல் மட்டும் பேச்சு வழக்கில் இருக்கும்.
காப்புரிமை செய்யப்பட்ட கோப்புகளை/பதிவுகளை நான் என் பதிவில் தெரியாமல் பயன்படுத்தியிருந்தால் மன்னிக்கவும். அவைகளைச் சுட்டிக்காட்டினால் நான் அவைகளை உடனே நீக்கிவிடுவேன் என்று உறுதியளிக்கிறேன். நன்றி.







சரவணா
மார்ச் 3, 2011
உங்களின் வலைப்பதிவு தளத்தின் முன் வடிவு பிரமாதம் …..
Tag line supero super!
neelavannan
April 20, 2011
PAN CARD – நிரந்தர கணக்கு எண் அட்டை – என்று எண்ணுகிறேன். எதற்கும் விசாரித்துக் கொள்ளவும். தவறெனில் மன்னிக்கவும். – நீலவன்.
jaghamani
December 24, 2011
//நான் இந்த வலைப்பதிவு மூலம் தமிழார்வத்தை அனைவருக்கும் பரப்ப எண்ணுகிறேன். அது போக சமுதாயத்திற்கு/குடியினருக்கு தேவையான சில கருத்துக்களையும் கூறும் வகையில் படைப்புகளை உருவாக்குகின்றேன்.//
அருமையான பயனுள்ள முயற்சிக்குப் பாராட்டுக்கள்..வாழ்த்துகள்..
balaraman
December 24, 2011
நன்றிங்க.